(Source: ECI/ABP News/ABP Majha)
Navneet Kaur | போலி சாதிச் சான்றிதழ்: ’அம்பாசமுத்திரம் அம்பானி’ பட நடிகை நவ்னீத் எம்.பி.,க்கு அபராதம்
போலி சாதிச்சான்றிதழ் விவகாரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்பியும், நடிகையுமான நவ்னீத் கவுருக்கு மும்பை நீதிமன்றம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது
தமிழில் வெளியான அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்தவர் நவ்னீத் கவுர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து ஒதுங்கிய நவ்னீத் அரசியலில் கால்பதித்தார். 2014ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம அமராவதி தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார். தனித்தொகுதியான அமராவதியில் சிவசேனா வேட்பாளர் ஆனந்தராவை எதிர்த்து களம் இறங்கினார். ஆனால் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாததால் தோல்வியைத் தழுவினார் நவ்னீத்.
மீண்டும் 2019ம் ஆண்டு ஆனந்த்ராவை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை நவ்னீத்துக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் துணை நின்றது. அரசியல் கட்சி ஆதரவால் ஆனந்த்ராவை தோற்கடித்தார். மகாராஷ்டிராவில் இருந்து தேர்வான 8 பெண் எம்பிக்களில் ஒருவரானார் நவ்னீத். ஆனால் அவர் போட்டியிட்டது தனித்தொகுதி என்றும், அதற்காக அவர் சாதி சான்றிதழை போலியாக சமர்பித்ததாகவும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நவ்னீத்துக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த ஆனந்த்ராவ் இந்த வழக்கை தொடர்ந்தார்.
Centre on Vaccination Price : தடுப்பூசிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயம் செய்தது மத்திய அரசு..!
அதில்,பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் நவ்னீத் கவுர். அவர் லபானா சமூகத்தைச் சேர்ந்தவர் . இந்த சமூகம் மகாராஷ்டிராவின் பட்டியலின சமூகத்துக்குள் அடங்காது. ஆனால், அவர் பட்டியலினத்துக்குள் வரும் மோச்சி என்ற சமூகத்தின் பெயரில் சாதி சான்றிதழை சட்டவிரோதமாக சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் நாக்பூர் உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், போலியான சாதிச் சான்றிதழை சமர்ப்பித்துள்ள குற்றத்துக்காக ரூ.2 லட்சம் அபராதத்தை நவ்னீத் கவுர் செலுத்த வேண்டும் என்றும், சான்றிதழை நீதிமன்றத்தில் 6 மாத காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.
நவ்னீத், மும்பை மகாராஷ்டிராவில் பிறந்தவராவார். மும்பையில் பிறந்தாலும் இவருடைய பெற்றோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். தமிழில் சில படங்களில் முகம் காட்டினாலும், தெலுங்கில் சத்ருவு, குட் பாய், ரூம்மெட்ஸ்,மகாரதி, யமதொங்கா, பங்காரு கொண்டா, பூமா,ஜபிலம்மா,டெரர் உள்ளிட்ட பட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். எம்.பி.,க்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதம், அவரது அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குமா, அல்லது தலைக்கு வந்த தலைப்பாகை உடன் போன கதையாக அபராதத்தோ முடிவடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.