மேலும் அறிய

7 வாக்குறுதிகள்.. இறங்கி அடித்த அரவிந்த் கெஜ்ரிவால்.. தேர்தலுக்கு அந்த பிரம்மாஸ்திரம் வேற இருக்கே

டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 7 வாக்குறுதிகள் என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால்

அடுத்தாண்டு நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 7 வாக்குறுதிகள் என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆரம்பமே அதிரடிதான்:

தேசிய தலைவநகரான டெல்லியை கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தர, ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.

ஆனால், 48 நாட்களிலேயே தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். பின்னர், ஓராண்டு காலம் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. 

அன்றிலிருந்து இன்று வரை அங்கு ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிதான். 9 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக பதவி வகித்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் வழக்கு குற்றச்சாட்டின் காரணமாக, அந்த பதவியில் இருந்து விலகினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் 7 வாக்குறுதிகள்:

தற்போது, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அதிஷி முதலமைச்சராக உள்ளார். இந்த நிலையில், டெல்லி அரசின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளதால், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களுக்கும் மேல் உள்ள நிலையில், அதற்கு அதிரடிக்கு தயாராகியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. முதலில் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தற்போது, 7 வாக்குறுதிகள் என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால்.

அதன்படி, கட்டணம் இல்லா மின்சாரம், கட்டணம் இல்லா தண்ணீர், கட்டணம் இல்லா கல்வி, மொஹல்லா கிளினிக்குகளில் கட்டணம் இல்லா சிகிச்சை, பெண்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயணம், முதியோர்களுக்கான புனித யாத்திரை திட்டம், பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஒரு மாநிலத்தில் கூட இந்த இலவசங்கள் எதையும் வழங்கவில்லை. இதற்குக் காரணம் அவர்களிடம் எண்ணம் இல்லை. இந்த வசதிகளை எப்படி வழங்குவது என்பது ஆம் ஆத்மிக்கு மட்டுமே தெரியும்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget