மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: வரும் 6ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. இன்றுமுதல் அக்னி நட்சத்திரம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் பறிபோனதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
- இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திர வெயில்.
- தமிழ்நாட்டில் மின் தேவை 20, 830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது - தமிழ்நாடு மின்சார வாரியம்.
- நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
- பருவமழை ஆரம்பிப்பதற்கு முன் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - ஈஸ்வரன்
- உதகையில் வரும் மே 7ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வருகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 6ம் தேதி வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை.
- தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்ககூடும் - வானிலை மையம்.
- விழுப்புரம்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி பழுதனாக தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் புகார்.
- விருத்தாசலம்: ரயிலில் இருந்து தவறி விழுந்த இறந்த கர்ப்பிணியின் உடல் ஒப்படைப்பு.
- உதகை: மலர்கண்காட்சியை முன்னிட்டு அலங்கார மேடைகளில் 35000 மலர் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்.
- பிரதோஷம் முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி.
- காரியாபட்டி குவாரியில் அனுமதித்ததை விட அதிகமாக 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்.
இந்தியா:
- பிரஜ்வால் துப்பாக்கி முனையில் 3 ஆண்டுகளாக வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார்.
- பாஜகவுக்கு நிதியளித்தவர்களின் பெயர்களை மோடி மறைப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி.
- மக்களவைத் தேர்தல் வாக்கு சதவீத முரண்பாடுகள் கவலை தருகிறது - சீதாராம் யெச்சூரி
- குஜராத்தில் அமித்ஷாவை எதிர்த்து களமிறங்கிய 16 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால் அதிர்ச்சி.
- நகரி தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜாவுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் பலர் எதிர்ப்பு.
- மணிப்பூர் மாநிலம் வன்முறையால பற்றியெரியத் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
- ஆளுநர் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து மேற்கு வங்க ராஜ்பவனுக்குள் போலீஸ் வர தடை.
- உறவினரின் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அனுமதி.
- பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான புகாரி அதானி குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது செபி.
- மே 20ம் தேதிக்கு பிறகே சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு
உலகம்:
- பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்தில் 20 பயணிகள் உயிரிழப்பு.
- ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்த தங்களது ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் - பிரிட்டன்
- போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் பஞ்சத்தின் அபாயம் தொடர்கிறது - உலக சுகாதார அமைப்பு.
- ஹமாஸ் இயக்கத்தினர் பிடியில் உள்ள பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
- ஆஸ்திரேலியா: மெழுகை எரிபொருளாக பயன்படுத்தி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
- கனடாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த 3 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு.
- இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் -2000 பேர் கைது.
- இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை மீதான மோகம் குறைந்து வருகிறது என ஆய்வறிக்கையில் தகவல்.
- பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழப்பு.
- தன்னை கொலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி செய்ததாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாட இருக்கிறது.
- ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion