மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டில் மழை.. பாலியல் சர்ச்சை - பிரஜ்வல் கைது.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அளவிலும், இந்தியா அளவிலும் உலக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் புதிய 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி கோருகிறது தமிழ்நாடு அரசு.
- தமிழ்நாட்டில் உள்ள 37,553 அரசு பள்ளிகளில் 20, 332 பள்ளிகளில் இணையதள வசதி.
- ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வது பற்றி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி.
- தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் 39 தொகுதிகளுக்கு பார்வையாளர்களை நியமித்தது.
- அனைத்து பள்ளிகளுக்கும் இன்றைக்குள் பாடநூல்கள் அனுப்பி வைக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை.
- சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
- தமிழ்நாட்டில் ஜூன் 1,2,3ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
- தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு.
- தருமபுரி: பாலக்கோடு அருகே காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 2 பேர் கைது.
- சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 6 பேர் கைது.
இந்தியா:
- பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாடு தப்பிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் கைது.
- 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.
- இந்தியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை கைப்பற்றும் - ஜெய்ராம்.
- தேர்தல் முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் பிரதமரை இந்தியா கூட்டணி தேர்ந்தெடுக்கும் - காங்கிரஸ்.
- பிரதமர் பதவிக்குரிய மாண்பை மோடி சீர்குலைத்துவிட்டதாக மன்மோகன் சிங் கடும் கண்டனம்.
- விவேகானந்தர் பாறையில், கேமரா இன்றி பிரதமர் மோடி தியானம் செய்ய வேண்டும் - தேஜஸ்வி யாதவ்.
- ஜம்மு- காஷ்மீரில் காவலர்களை தாக்கியதாக 16 ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு.
- ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் 150 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழப்பு.
- கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரியில் ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு.
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
உலகம்:
- பாகிஸ்தானில் நுழைந்து கைதான இந்திய பெண், மகனுடன் எல்லை காவல்படையிடம் ஒப்படைப்பு.
- டென்மார்க் நாட்டில் விமானத்தின் எஞ்சினால் உறிஞ்சப்பட்டு பயணி ஒருவர் உயிரிழப்பு.
- ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.
- கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டார்.
- ஈகுவடார்: குவாயாகில் சிறிய ரக விமானம் மலையில் விழுந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு.
- சீனாவில் இருந்து தகவல் தொடர்பு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது பாகிஸ்தான்.
- எகிப்தும் காசாவும் இடையிலான எல்லைப் பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
- தனது கிழக்குக் கடல் பகுதியில் சரமாரியாக ஏவுகணைகளை வீசி வடகொரியா சோதனை.
- ஈரான் எல்லைப் படையினர் சுட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
- ராஃபா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பு - இந்தியா கவலை
விளையாட்டு:
- நார்வே செஸ் போட்டி 2024: பிரக்ஞானந்தா, வைஷாலி முதலிடம்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி காலிறுதிக்கு தகுதி
- நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவிற்கு காத்மண்டுவில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது.
- இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும்போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் வந்ததாக தகவல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion