"போலி வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை"... ராஷ்மிகா விவகாரத்தில் மத்திய அரசு அதிரடி!
போலீயாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Rashmika Deepfake Video: போலீயாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம்:
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் சாதனையாளர்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலரது முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் நிர்வாண அல்லது ஆபாச வீடியோவுடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலமாக மார்பிங் செய்து உண்மையான வீடியோ போல பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஸ்வரூபம் எடுத்த ராஷ்மிகா விவகாரம்:
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி ஒரு பான் இந்திய நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தென்னிந்திய லெவெலில் கொண்டாடப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுத்து நடிகர் அமிதாப்பச்சன் மகளாக 'குட் பை' படத்திலும் 'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாகவும் நடித்து பட்டையை கிளப்பினார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
ஆனால், இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வளர்ந்து வரும் AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும், ஒரிஜினல் வீடியோவில் நடிகை ஷாரா படேல் இருப்பதாகவும், அதை மாற்றி ராஷ்மிகாவின் முகத்தை தொழில்நுட்பம் மூலம் பொருத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு வார்னிங்:
ரஷ்மிகாவின் இந்த முகம் சுளிக்க வைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். நடிகர் அமிதாப் பச்சனும் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட ராஷ்மிகாவும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், போலீயாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 ஆண்டு சிறையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது. எனவே, தற்போது நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், மத்திய அரசு இதனை நினைவூட்டியுள்ளது.
மேலும் படிக்க