மேலும் அறிய

Rashmika Mandanna: "ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" - வீடியோவில் இருக்கும் ஒரிஜினல் நடிகை

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் சம்பந்தப்பட்ட பெண் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் சாதனையாளர்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலரது முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் நிர்வாண அல்லது ஆபாச வீடியோவுடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தின் மூலமாக மார்பிங்  செய்து உண்மையான வீடியோ போல பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ராஷ்மிகா மந்தனா:

தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி ஒரு பான் இந்திய நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 'கீதா கோவிந்தம்' படம் மூலம் இளைய தலைமுறையினரின் ஃபேவரட் நடிகையான ராஷ்மிகா, 'சுல்தான்' திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'வாரிசு' படத்தில் இளைய தளபதி விஜய் ஜோடியாக இணைந்த ராஷ்மிகா தற்போது தனுஷ் நடிக்கும் டி51 படத்தில் இணைந்துள்ளார். மேலும் புஷ்பா 2 படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். தென்னிந்திய லெவெலில் கொண்டாடப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுத்து நடிகர் அமிதாப்பச்சன்  மகளாக 'குட் பை' படத்திலும் 'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாகவும் நடித்து பட்டையை கிளப்பினார். 

டீப் ஃபேக் வீடியோ:

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.  ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனால், இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வளர்ந்து வரும் AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும், ஒரிஜினல் வீடியோவில் நடிகை ஷாரா படேல் இருப்பதாகவும், அதை மாற்றி ராஷ்மிகாவின் முகத்தை தொழில்நுட்பம் மூலம் பொருத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.  ரஷ்மிகாவின் இந்த முகம் சுளிக்க வைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. திரை பிரபலங்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். மத்திய தொழில்நுட்பத்தை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நடிகை ஷாரா படேல் விளக்கம்:

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் உள்ள சம்பந்தப்பட்ட நடிகை ஷாரா படேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, ”யாரோ ஒருவர் எனது உடலையும், பிரபல பாலிவுட் நடிகை ராஷ்மிகாவின் முகத்தையும் பயன்படுத்தி டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கியது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்த டீப்ஃபேக் வீடியோவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வீடியோ  பார்த்து நான் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டேன். இப்படி இந்த  வீடியோ வெளியானது மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இதனால், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதற்கு பயமாக இருக்கிறது.  பெண்கள், சிறுமிகளின் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது. இணையத்தில் பகிரப்படுவது அனைத்தும் உண்மையானவை அல்ல. எனவே, நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் உண்மையானதா என்பதை தயவு செய்து பலமுறை சரி பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தலைப்பு செய்திகள்

Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget