மேலும் அறிய

கோவை அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு ; 4 பேர் போலீசில் சரண்

மயிலேறிபாளையம் பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். 48 வயதான இவர், வழக்கறிஞராக பல ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார். இரத்தினபுரி பகுதியில் இவரது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவரது மனைவி நித்தியவள்ளி தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கு ஒன்று தொடர்பாக பொள்ளாச்சி வரை செல்வதாக உதயகுமார் தனது மனைவியிடம் கூறிவிட்டு மதியம் கிளம்பியுள்ளார்.

தனக்கு சொந்தமான காரில் அவர் கிளம்பிய நிலையில், அவருடன் மேலும் சிலரும் அந்த காரில் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள மயிலேறிபாளையம் பிரிவு அருகே வந்த போது, நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் அந்த கார் பயணித்துள்ளது. சிறிது தூரத்தில் கோழிப்பண்ணை ஒன்றின் அருகே காரில் இருந்தவர்கள் உதயகுமாரை வெளியே இறக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்தார். இதன் பின்னர் அவரை படுகொலை செய்த நபர்கள், உதயகுமாரின் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

4 பேர் சரண்

இது தொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிபாளையம் காவல் துறையினர் உதயகுமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு செய்தார். உதயகுமாரின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் கொலைக்காக காரணம் குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் உதயக்குமார் கொலைக்கு காரணமானவர் விரைந்து கைது செய்ய காவல் துறையிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனிப்படை காவல் துறையினர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த அய்யனார் என்கிற செல்வம் (26), கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்கிற விருமாண்டி (20), கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (26), கோவை சங்கனூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (20) ஆகிய நால்வர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நள்ளிரவில் சரண் அடைந்து உள்ளனர். இதையடுத்து நால்வரையும் காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அரசியலுக்காக கடவுள் பெயர பயன்படுத்துறதா" திருப்பதி லட்டு விவகாரம்.. ஜெகன் மோகன் பதிலடி!
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அரசியலுக்காக கடவுள் பெயர பயன்படுத்துறதா" திருப்பதி லட்டு விவகாரம்.. ஜெகன் மோகன் பதிலடி!
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Tirupati Laddu: 300 வருட பாரம்பரியம், மெட்ராஸ் பங்கு, 6 மாற்றங்கள் - திருப்பதி லட்டு பிரசாதத்தின் வரலாறு
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
தி.மலையில் பயங்கரம்; சென்னையை சேர்ந்த பெண் சாமியார் வெட்டி படுகொலை
தி.மலையில் பயங்கரம்; சென்னையை சேர்ந்த பெண் சாமியார் வெட்டி படுகொலை
"திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்” திண்டுக்கல்லில்  இருந்து பிரச்சனைக்குரிய நெய் சப்ளை..!
Exclusive:
Exclusive: "எங்கள் Raaj நெய் தரமானதுதான்” திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பிய AR Dairy நிறுவனம் விளக்கம்..!
இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்
இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்
Embed widget