Job Fair : வேலை தேடும் சென்னை வாசிகள் கவனத்திற்கு.. 20-ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்; முழு விவரம்!
Chennai Job Fair : சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரம்.
சென்னையில் வரும் 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்பயிற்சி துறை அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் :
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் -கிண்டி
ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருகிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் : 20.02.2023
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
யாரெல்லாம் பங்கேற்கலாம் :
இதில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கலை மற்றும் அறிவியல் துறையில் இளங்களை பட்டம் பெற்றவர்கள், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் பங்கேற்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in-இல் பதிவு செய்ய வேண்டும்.
பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளர். வேலைத் தேடுபவர்கள் இதை பயன்படுத்திகொள்ளுமாறு அரசு சார்பில் கேட்டுகொள்ள்ப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிக்காட்டும் மையங்களிலும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் நல்ல பணிக்கு சென்றுள்ளனர்.
சென்னையில் வரும் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
வேலையளிக்கும் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆல் தி பெஸ்ட்!
மேலும் வாசிக்க.