Varisu Box Office Collection: துள்ளிக்குதித்த துணிவை உலகளவில் தட்டித் தூக்கிய வாரிசு! வெளியான ஒரு வார கலெக்ஷன்!
பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது
பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மெட்ரோ ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என பார்க்கும் இடமெங்கும் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்தது. இதனிடையே படம் வெளியாகி ஒருபுறம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், மறுபுறம் விஜய் ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்தான் இப்படத்தின் உயிர் நாடி என்றும், அவர் இல்லையென்றால் படமே ஒன்றுமில்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
வாரிசு படம் வெளியாகி சில நாட்கள் ஆன நிலையில், அப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தினமும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.தற்போது வெளியிட்ட பதிவில், உலகமெங்கும் முதல் வாரத்தில் 210 கோடி ரூபாயை வாரிசு படம் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்களின் வசூலில், வாரிசு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் துணிவை விட குறைவாக இருந்து வந்தது. தமிழ்நாடு அளவில் வாரிசு, துணிவை விட குறைந்த அளவில் வசூல் செய்து இருந்தாலும், உலகளவில் வாரிசு, துணிவு வசூலை வீழ்த்தியுள்ளது. துணிவு தமிழ் நாட்டில் வெற்றிநடை போட, ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தியேட்டர் உரிமையாளர்களும்தான் காரணம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாரிசு படக்குழுவினர்
வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
மேலும் படிக்க : Varisu Khushbhu: நீக்கப்பட்ட குஷ்பூ காட்சிகள்! சொதப்பிய எண்ட்ரி சாங்...! - மன்னிப்பு கேட்ட வம்சி