மேலும் அறிய

Chennai High court: இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கட் கிழமைக்கு ஒத்திவைப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்த அரசின்  மேல் முறையீட்டு வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்த அரசின்  மேல் முறையீட்டு வழக்கை திங்கள் கிழமை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Kallakurichi Case: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் - 63 யூடியூப், 31 ட்விட்டர் கணக்குகளை முடக்க நடவடிக்கை..!

இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த  கடந்த 2021 ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், தமிழக அரசுத்தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ்சந்திரா அமர்வில் முறையிட்டார். முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், அரசின் மேல் முறையீட்டு வழக்கை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

TN Rains: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
தமிழகத்தில் 458 இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த மத்திய அமைச்சர்!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
"அவரு தலித்.. அதனால கொன்னுட்டாங்க" போலீஸ் கஸ்டடி மரணம்... மனம் நொந்து பேசிய ராகுல் காந்தி
Chennai  Power Shutdown  (24-12-2024): சென்னை மக்களே உஷார்.. நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் இதுதான்
சென்னை மக்களே உஷார்.. நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் இதுதான்
Embed widget