மேலும் அறிய
Advertisement
Ekambareswarar Temple: மடப்பள்ளியில் கரப்பான் பூச்சி, புறா, எலி தொல்லைகள்... உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்..!
Ekambareswarar Temple Kanchipuram: பக்தர் ஒருவர் ஆன்லைன் மூலமாக கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஏராளமான பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. அவற்றின் முக்கிய கோவிலாக பெரிய காஞ்சிபுரம் பகுதியில், அமைந்துள்ள ஏகாம்பரநாதர் கோவில் விளங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை புரிந்து சிவனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் இரண்டாம் பிரகாரம் அக்னி மூலையில் செயல்பட்டு வரும் மடப்பள்ளியில், தயாரிக்கப்படும் பிரசாதம் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு வாட்ஸ் அப் மூலம் பக்தர் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம், புகார் தெரிவித்து இருந்தார்.
கரப்பான் பூச்சிகளும், புறாக்களும்
ஆன்லைன் மூலமாக பக்தர் ஒருவர் அளித்திருந்த புகாரில், மடப்பலையில் சமையல் செய்யும் நபர் மது அருந்திவிட்டு சமையல் செய்வதாகும் இதனால் நிதானம் இன்றி அவர், சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. சமையல் செய்ய இடத்தில் கரப்பான் பூச்சிகள், புறாக்கள், பூனை உள்ளிட்டவை வந்து செல்வதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் உணவு மற்றும் பிரசாதம் அருந்து வருபவர்கள் கடும் அவதரிக்குள்ளாவதாகவும், சமீபத்தில் அந்த உணவை சாப்பிட்ட எனக்கும் , உடல் நல குறைவு ஏற்பட்டதாகவும் அந்த பக்தர் புகார் தெரிவித்து இருந்தார்.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு
புகார் வந்தவுடன், கடந்த ஏப்ரல் மாதம் , சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.. ஏகாம்நாதர் கோவில் செயல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பது தெரியவந்தது. கரப்பான் பூச்சி இருந்ததையும், புறாக்கள் அந்த பகுதியில் வந்து செல்வதையும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் காலாவதி ஆனதையும் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து, இது குறித்து கோவில் செயல் அலுவலரிடம், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உடனடியாக இவற்றை சரி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
மீண்டும் எழுந்த புகார்
இந்த நிலையில் மீண்டும் ஏகாம்பரநாதர் கோவில் மடப்பள்ளி தயாரிக்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக டில்லி பாபு என்பவர் ஆன்லைன் மூலமாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து, காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு துறையினர் மீண்டும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், தரமற்ற முறையில் உணவு தயாரிப்பது விசாரணைகள் தெரிய வந்தது. இதனையடுத்து , ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலருக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். புகழ் பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில், தரமற்ற முறையில் உணவு தயார் செய்ததற்காக செயல் அலுவலருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion