Breaking News Live: கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்த மார்ச் 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
LIVE

Background
Breaking News Live: இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 வரை புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது
இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 வரை புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறதுhttps://t.co/wupaoCz9iu | #EarthHour #EarthHour2023 pic.twitter.com/4BgPpBg3gr
— ABP Nadu (@abpnadu) March 25, 2023
Breaking News Live: 'மோடி என்பவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள்..' வினையாக மாறிய பழைய ட்வீட்...புதிய சிக்கலில் குஷ்பூ..!
மோடி குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை குஷ்பூ போட்ட ட்வீட் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு வினையாக மாறியுள்ளது.
அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பூ, "எங்கே பார்த்தாலும் மோடி என்ற பெயர்தான் வைத்திருக்கிறார்கள். அந்த பெயரை வைத்துள்ளவர்கள் அனைவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, மோடி என்ற பெயருக்கான அர்த்தத்தை ஊழல் என மாற்றிவிடுவோம். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, மோடி குறித்து குஷ்பூ வெளியிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Breaking News Live : பக்தர்களே.. பங்குனி உத்திர விழா - சபரிமலை ஐப்பன் கோயில் நடை நாளை திறப்பு.!
உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், பங்குனி உத்திர விழாவுக்கு சபரிமலை ஐப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மார்ச்,27 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி ஏப்ரல்,5 ஆம் தேதி வரை பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பில் கைகோர்த்திடுவோம் - முதலமைச்சர்
போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா தொற்று சற்று அதிகரிக்கும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

