Breaking LIVE : கரூர் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்; மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Background
கரூர் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்; மாநகராட்சி ஆணையர் உத்தரவு
கரூரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சுக்காலியூர் பகுதியில் விஷ வாயு தாக்கி நான்கு பேர் உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் தங்கமணியை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கூடுதல் பதில் மனுத்தாக்கல்
மேகதாது குறித்த ஆலோசனையும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு பதில் மனு. காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுவதாக, தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவில் தகவல்
பாஜகவில் காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்
பாஜகவில் காயத்ரி ரகுராம் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கம் - மாநில தலைவர் அண்ணாமலை
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
சென்னையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முற்றுகை. முற்றுகை போராட்டத்தின் போது ஓய்வு பெற்ற ஊழியர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை இராணி மேரி கல்லூரியின் 104 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்துனராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாடி வருகிறார்.