மேலும் அறிய

Alpha Adimai | `ஆல்ஃபா அடிமை’: நுனி சீட்டில் அமர்ந்து ரசிக்க வைக்கும் பரபர இண்டிபெண்டண்ட் க்ரைம் த்ரில்லர்!

சுயாதீனத் திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்களில், தேர்ந்த நடிகர்களாக அல்லாதோரைக் கொண்டு, திரைக்கதையையும், காட்சியமைப்புகளையும் நம்பி இயக்கப்படுபவை. அப்படி நம்பிக்கையோடு வெளிவந்திருக்கிறது `ஆல்ஃபா அடிமை’.

சுயாதீனத் திரைப்படங்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த பட்ஜெட்களில், தேர்ந்த நடிகர்களாக அல்லாதோரைக் கொண்டு, திரைக்கதையையும், காட்சியமைப்புகளையும் நம்பி இயக்கப்படுபவை. அப்படி நம்பிக்கையோடு வெளிவந்திருக்கிறது `ஆல்ஃபா அடிமை’.

10 லட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை ஸ்டாக் வைத்திருக்கும் மயில்சாமி மற்றும் அவனது கூட்டாளிகள் ஆறு, பொன்னன் ஆகியோருக்குக் காவல்துறையினர் ரெய்ட் செய்கிறார்கள் என்ற சிக்கல் வருகிறது. அதனை ஊட்டிக்கு எடுத்துச் சென்றால், காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முடியும். தீரஜ், விக்கி ஆகிய நண்பர்களுக்கு அன்று இரவு பார்ட்டி நடத்துவதற்கு கஞ்சா வாங்கும் தேவையிருக்கிறது. அதனால் மயில்சாமியிடம் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனைத் தெரிந்துகொள்ளும் காவல்துறை, தீரஜ், விக்கி ஆகியோரை வைத்து மயில்சாமியைப் பிடிக்க திட்டம் போடுகிறது. மயில்சாமியின் திட்டம் நிறைவேறியதா, தீரஜ், விக்கி ஆகியோருக்கு என்னவானது என்பதைத் தொடர்ந்து பேசியிருக்கிறது `ஆல்ஃபா அடிமை’. 

வெளிவரப் போகும் மூன்று பாகங்களில் முதல் பாகமாக வில்லனின் முன்கதையைப் பேசும் படமாக வெளிவந்திருக்கிறது `ஆல்ஃபா அடிமை’. தஸ்தாவஸ்கியின் `கரம்சோவ் சகோதரர்கள்’ நாவலின் வரிகளோடு தொடங்குகிறது படம். வெறும் 88 நிமிடங்களில், புதுமுகங்களையும், குறைந்த பொருட்செலவையும் முன்வைத்து, திரைக்கதையை நம்பி இறங்கியிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். தொடக்க காட்சியில், நண்பர்களோடு சேர்ந்து உரையாடும் கதாபாத்திரம் ஒரு நீள வசனம் ஒன்றைப் பேசுகிறது. அங்கிருந்து படத்தின் மீது எழும் ஆர்வம், இறுதிக் காட்சி வரை குறையாமல் நீள்கிறது. படத்தின் திரைக்கதையோடு, மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது இருளில் நகரும் மணிகண்டன் மூர்த்தியின் கேமரா. 

Alpha Adimai | `ஆல்ஃபா அடிமை’: நுனி சீட்டில் அமர்ந்து ரசிக்க வைக்கும் பரபர இண்டிபெண்டண்ட் க்ரைம் த்ரில்லர்!

மயில்சாமியாக வரும் கல்கி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொன்னனிடம் சீறுவதும், ஆறுவுடன் இணைந்து சிரித்து மகிழ்வதும், இறுதிக் காட்சியில் ஆறுவுடன் அவர் நிகழ்த்தும் உரையாடலும் அவரின் திறமையை வெளிப்படுத்துகின்றன. `ஆரண்ய காண்டம்’ சப்பை முதலான பல்வேறு கதாபாத்திரங்களை நினைவுப்படுத்தும் பொன்னன் கதாபாத்திரம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த வேடம் என்றாலும், அடுத்தடுத்த பாகங்களில் அவருக்கான இடம் எப்படி இருக்கும் என்பதை க்ளைமாக்ஸ் காட்சி உணர்த்துகிறது. ஆறு கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநர் ஜினோவியே நடித்திருக்கிறார். டார்க் ஹியூமருக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அந்தக் கதாபாத்திரம். 

`ஆல்ஃபா அடிமை’ படத்தில் மூன்று தரப்புகள் வருகின்றன. கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு, கஞ்சா வாங்கப் போகும் இளைஞர்களின் தரப்பு, காவல்துறையினரின் தரப்பு. மூன்று தரப்புகளிலும் நிலவும் படிநிலை அவரவர் தரப்புக்குப் பிரச்னையாகிறது. இளைஞர்களிடம் தீரஜ் விக்கி மீது செலுத்தும் அதிகாரம் அவர்களைக் காவல்துறையிடம் சிக்க வைக்கிறது. மகளின் பிறந்தநாளுக்காக வீட்டிற்கு விரைவில் செல்ல நினைக்கும் காவலர் மீது தலைமையில் இருந்து வரும் அழுத்தம், குறைந்த ஆள்களை வைத்து மயில்சாமியைப் பிடிக்க நினைத்து, தோல்வியில் முடிகிறது. மயில்சாமியின் தரப்பில் இருக்கும் படிநிலை, பொன்னானைக் குறைத்து மதிப்பிடுகிறது; அவனைக் கேவலமாக நடத்துகிறது. இறுதியில் அதற்கான எதிர்வினையையும் ஈட்டிக் கொள்கிறது.

Alpha Adimai | `ஆல்ஃபா அடிமை’: நுனி சீட்டில் அமர்ந்து ரசிக்க வைக்கும் பரபர இண்டிபெண்டண்ட் க்ரைம் த்ரில்லர்!

குறும்படங்களைப் போன்ற தயாரிப்பு என்ற போதும், அதன் பரபரவென்ற, எங்கும் கவனம் சிதறாத திரைக்கதையால் சிறப்பாக இருக்கிறது இந்தத் திரைப்படம். எனினும், மயில்சாமி என்ற பெயர் கொண்ட கஞ்சா வியாபாரி சிலுவை அணிந்திருப்பதும், கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொல்வதும், பிடிபட்ட மற்றொரு கஞ்சா வியாபாரியின் பெயர் ஜோசப் எனக் கூறப்பட்டிருப்பதும், மயில்சாமிக்கு சப்ளை செய்தவனின் பெயர் நஜீப் என்று இருப்பதும் சிறுபான்மையினர் மீதான மோசமான சித்தரிப்பு. இந்த சித்தரிப்புகளைத் தாண்டி, இரண்டு ஆண்களை அவமானப்படுத்த தன்பாலீர்ப்பை வசைச் சொல்லாகப் பயன்படுத்தியிருப்பதும் மிகவும் பிற்போக்கானது. 

இந்தப் பிரச்னைகளைத் தாண்டி, வில்லனுக்கான முன்கதை என்ற அளவில் சிறப்பாக வந்திருக்கிறது `ஆல்ஃபா அடிமை’. அடுத்தடுத்த பாகங்கள் முழுக் கதையையும் நமக்கு சொல்லும் என்ற நம்பிக்கையையும் இந்தப் படம் உருவாக்குகிறது. 

`ஆல்ஃபா அடிமை’ Sony Liv தளத்தில் வெளியாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
சீமானுக்கு போலீஸ் சம்மன்: பிப்.27, காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்: நடிகை பாலியல் புகார் வழக்கு..
TN Rain: வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.!
வானிலையில் ட்விஸ்ட்.! தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது.! லிஸ்ட் இதோ.!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சோலி முடிஞ்சு.. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அவுட்! கண்ணீர் விடவைத்த நாகின் பாய்ஸ்!
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபியில் தாக்குதல் நடத்த சதி? அம்பலமானது தீவிரவாதிகள் திட்டம் - போட்டிகள் இடமாற்றமா?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
Seeman: இப்போ காளியம்மாளும் காலி.. அடிமேல் அடி வாங்கும் அண்ணன்! என்ன செய்யப்போகிறார் சீமான்?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
NCET 2025: ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு; மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
எம்பி சுதா குறித்து அன்புமணி ராமதாஸ் பேச்சு... சூடான எம்பி - என்ன நடந்தது...?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
NZ vs BAN: பாகிஸ்தானுக்கு நம்பிக்கைத் தரும் பங்களா பாய்ஸ்! ஆசையில் மண்ணை அள்ளிப்போடுமா நியூசிலாந்து?
Embed widget