மேலும் அறிய

திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

மணிகண்டனை விசாரணைக்கு அழைத்து சென்ற போது அரிவாளை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை தாக்கியுள்ளார். இதனால் போலீசார் தற்காப்பிற்காக மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம்  எஸ்.ஐ சண்முகவேல் கொலையில் தொடர்புடைய முக்கியநபரான மணிகண்டனை பிடிக்க போலீசார் முயற்சி செய்த போது, தப்பிக்க முயன்ற மணிகண்டன் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்

எஸ்.எஸ்.ஐ கொலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, குடும்ப தகராரை விசாரிக்க சென்ற  சிறப்பு எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மடத்துக்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கப்பாண்டியன், மணிகண்டன் ஆகியோருக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் ஏற்பட்ட சண்டையினால் அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது விசாரணையின் போது ஆத்திரம் அடைந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள், அரிவாளால் காவல் ஆய்வாளரை சரமாரியாக  தாக்கி கொடூரமாக வெட்டிபடுகொலை செய்தனர். அருகில் இருந்த போலீஸ் வாகன ஓட்டுநர் அழகுராஜா சிறிது காயமடைந்தார்.

தீவிர தேடுதல் பணி:

இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஐந்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர். டிஜிபி சசிமோகன் நேரில் சென்று சம்பவ நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டியன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்தனர். ஆனால், மணிகண்டன் தலைமறைவாகவே இருந்தார்.

காலையில் கைது:

இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன், இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட மணிகண்டனை, போலீசார் கொலை நடைபெற்ற இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

போலீஸ் எண்கவுண்டர்:

அப்போது திடீரென அவர் அங்கிருந்த அரிவாளை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை மணிகண்டன் தாக்கியுள்ளார். இதனால் போலீசார் தற்காப்பிற்காக மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்துள்ளார்.

அவரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மணிகண்டனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

விளக்கம் அளிக்கபடும்:

இந்த எண்கவுண்டர்  சம்பவம் தொடர்பாக பேசி உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மணிகண்டன் போலீசாரை தாக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக முழு விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?
Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
Hyundai Exter vs Maruti Suzuki Fronx இரண்டில் எது பெஸ்ட் கார்? இதோ கம்பேரிசன்
Hyundai Exter vs Maruti Suzuki Fronx இரண்டில் எது பெஸ்ட் கார்? இதோ கம்பேரிசன்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Embed widget