மேலும் அறிய

TN Corona Spike: சென்னையில் 1000 ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. தமிழ்நாட்டின் நிலவரம் என்ன? முழு விவரம் இதோ..

தமிழ்நாட்டில் மேலும் 521 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 521 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில். நேற்றைய தினம் கொரோனா காரணமாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில் தமிழ்நாட்டில் க்லஸ்டர் பாதிப்புகள் இல்லை, தனி மனித பாதிப்பு தான் இருக்கிறது. க்லஸ்டர் பாதிப்பு இருந்தால் மட்டுமே சமூக தொற்று ஏற்படும் என தெரிவித்தார்.  

கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது அது 500-ஐ கடந்து பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 521 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 3,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 386 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் சிங்கப்பூர், ஓமன், கத்தார், அரபு நாட்டிலிருந்து வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாடில் 6,014 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 521 மாதிரிகளில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 36,02,763 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 140 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 911 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் மெதுவாக உயர்ந்து வருகிறது. மார்ச் மாதம் தொற்று சதவீதம் 10% கீழ் இருந்த நிலையில், கோவை – 11.7%, கன்னியாகுமரி – 11.4%, திருவள்ளூர் – 11%, செங்கல்பட்டு – 11%, சேலம் – 10.9%, ராணிபேட் – 10.8%, சென்னை – 10%, ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவின் Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் மாறுபாடு தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்தால் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்றைய தினம் 10,000 ஐ கடந்து தினசரி பாதிப்பு பதிவானது. கேரளாவில் அதிகபட்சமாக 19,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Whatsapp Feature : வாட்ஸ் அப்பில் வரப்போகும் சூப்பர் அப்டேட்... இமேஜ்களை அனுப்புவதில் புதிய வசதி...!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget