Upcoming Nayanthara Movies: நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ!
கோலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் நயன், தன் திருமணத்துக்கு பின்னும் தொடர்ந்து படம் நடிக்கவும், தயாரிப்பில் ஈடுபடவும் வேண்டும் என்றே அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.
கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் திருமணச் செய்தி தான் தற்போதைய ஹாட் டாப்பிக்!
நயன் - விக்னேஷ் சிவன் திருமணம்
நயன் தாரா வரும் ஜூன் 9ஆம் தேதி தன் நீண்ட கால காதலர், இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்கிறார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் வலம் வரும் நயன், தன் திருமணத்துக்கு பின்னும் தொடர்ந்து படம் நடிக்கவும், தயாரிப்பில் ஈடுபடவும் வேண்டும் என்றே அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.
ஓடிடியில் வெளியாகும் ஓ2
வரும் ஜூன் 17ஆம் தேதி நயன் தாரா நடித்துள்ள ’ஓ2‘ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் யூடியூப் புகழ் சிறுவன் ரித்விக் நயன் தாராவுடன் முதன்முதலாக வெள்ளித்திரையில் நடிக்கிறார்.
எதிர்பாராத விதமாக பூமிக்கடியில் மாட்டிக்கொள்ளும் பேருந்து, அதில் மாட்டிக்கொள்ளும் பயணிகள், விநோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் மகனுடன் மாட்டிக்கொள்ளும் நயன் என சுழலும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் அடுத்தடுத்து வெளியாகும் நயன்தாராவின் படங்கள் குறித்து காண்போம்...
கோல்ட்
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர், ப்ரேமம் புகழ் அலோன்ஸ் புத்ரன் திரைப்படத்தில் பிரபல நடிகர் ப்ரித்விராஜ் உடன் நயன் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்து தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
காட்ஃபாதர்
மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் காட்ஃபாதர். இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் நயன் தாரா இணைந்து நடித்து வருகிறார்.
கனெக்ட்
மாயா, கேம் ஓவர் படங்களின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகும் கனெக்ட் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். மாயா படத்தைப் போல் இப்படமும் க்ளாசிக் ஹாரர் படங்களின் வரிசையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஜவான்
View this post on Instagram
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி இயக்கத்தில் இந்தியில் ஷாரூக்கானுடன் நயன் இணைந்து நடிக்கிறார். ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.