மேலும் அறிய

Irrfan Khan: அசத்தல் பார்வை... அபார நடிப்பு...! திரையுலகை திரும்பி பார்க்கவைத்த இர்ஃபானின் 5 படங்கள்!

Irrfan Khan Death Anniversary: இர்ஃபான் என்ற நட்சத்திரம் என்றும் கலையால் ஒளிந்துகொண்டிருக்கும்.

பாலிவுட் சினிமா இலக்கணத்தை மாற்றி எழுதியவர். வசீகரத் தோற்றம் இருந்தால் மட்டுமே பாலிவுட் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவர். இவரின் வசன உச்சரிப்பில் தனித்தன்மை மிளிரும். வசமில்லா காட்சிகளைத் தன் கண்கள் வழியே, அச்சூழலை நமக்குள் கடத்தும் திறமைசாலி. தன் இயல்பான நடிப்பினால் உச்சம் தொட்ட நாயகன். சினிமாவில் உயரம் தொட, தன் திறமையையும்,பொறுமையையும் ஆயுதமாக்கினார். தான் ஏற்கும் கதாப்பாத்திரம் எதுவாக இருந்தாலும், அதை நேர்த்தியாக நடிப்பார். இவரின் திறமை உலகம் அறிந்ததே.தன் இயல்பான நடிப்பால் இன்றும் மக்கள் மனங்களில் நீங்க இடம்பெற்றிருப்பவர், இர்ஃபான் கான் (Irfan khan). நமக்குக் குட்பை சொல்லாமலே சென்றுவிட்ட இர்ஃபான் கானின் நினைவு தினம் இன்று.

இஃபான் கான் மறைந்து இரண்டாண்டுகள் கடந்தாயிற்று. ஆனலும் அவர் நடித்துவிட்டு சென்ற அவரின் கதாப்பாத்திரத்தின் மூலம் வாழ்கிறார், இர்ஃபான்.

பெரும் செல்வந்தர் குடும்பத்தின் பின்னணியில் இருந்து வந்தவர். பெரும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்வைத் தொடங்கினார். ஆனால், வாழ்க்கை அவரின் கையில் நடிப்பு என்ற பரிசை விட்டுச்சென்றது. அதைப் பொறுப்புடன் ஏற்று தன் கடமையை செய்தவர். பாலிவுட் மு தல் ஹாலிவுட் வரை இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியவர்.

 

இர்ஃபான் கான் என்ற வான் நட்சத்திரம்:

சினிமாவை கனவுத்தொழிற்சாலை என்பார் எழுத்தாளர் சுஜாதா. பாலிவுட் முதல் ஹாலிவுட் கனத்தொழிற்சாலைகளில் தன்னிகற்ற நடிப்பால் கோலோச்சியவர் இஃபான். நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் படித்து முடித்தபின், கைக்கு கிடைத்த வாய்ப்பில் நடித்தார். அதில் இரண்டே காட்சிகளில் மட்டும்தான் தோன்றுவார், இர்ஃபான் கான். சீரியல்களும் அவர் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. பின்னர், வாரியர் என்ற படம் அவர் சினிமா கேரியரில் ப்ரேக்த்ரூ. அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வரலாறு பேசும்படியாக அமைந்தன. லைஃப் ஆஃப் பை', 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்', 'இன்ஃபெர்னோ', 'ஜுராசிக் வேர்ல்டு' ஆகிய படங்கள் இவரின் திறமையை உலகறிய செய்தன. 'தி வாரியர்' தொடங்கி 'ராக்', மெட்ரோ', 'பான் சிங் டோமர்', 'டி-டே', 'ஸ்லம்டாக் மில்லினியர்', 'லைஃப் ஆஃப் பை', 'இந்தி மீடியம்' போன்ற இவர் நடித்த படங்களின் பெயர் நீளும். கலை ஒரு மாய உலகம். அந்த வித்தையை தன்பாணியில் மிகச்சரியாக செய்தவர், இர்ஃபான். கண்கள் மூலம் உணர்வுகளை பார்வையாளர்களுக்குக் கடத்தும் மாயாஜாலக்காரன். அவரின் நடிப்பு திறமையும், புகழும் சொல்லில் அடங்காதவை. இர்ஃபான் நடித்த படங்கள் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டியவைகள். முத்தானவைகளில் சில…..

 

தி லன்ச்பாக்ஸ் (THE LUNCHBOX)

மும்பையின் நடுத்தர வயது சாஜன் பெர்ஃனாண் டஸாக லன்ச்பாக்ஸில் அவர்  நடித்திருப்பார். மும்பையின் அன்றாட அவசர வாழ்க்கை, லன்ச்பாக்ஸ் கட்டிக்கொடுப்பவர்கள் என நீளும் இப்படத்தின் கதைக்களம். ஒரு லஞ்ச் பாக்ஸ் தவறுதலாக வேறு நபரிடம் போய்ச் சேர்ந்தால் என்ன நடக்கும்? என்கிற சின்ன கருவை நேர்த்தியான திரைக்கதையால் அசத்தியிருப்பார், இயக்குனர்.

மனைவியை இழந்து தனிமையில் வாழும் இர்பான் கான், பணி ஓய்வு பெறும் காலத்தில் அவருக்கு சக மனிதர்களுடன் சிரிப்பைக் கூட பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார். இப்படியாக இவருடைய கதாப்பாத்திரம் நகர்ந்திருக்கும், தி லன்ச்பாக்ஸ். உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளின் சங்கமமாக இருக்கும், இது.

 

மக்ஃபூல் (MAQBOOL)

மக்ஃபூல் திரைப்படத்தில் இஃபானின் நடிப்பு அபாரமானதாக இருக்கும். அழகான காதல் கதை திரில்லர் என நீளும் கதை.

பிக்ஹூ (Piku)

குழந்தையாகி வரும் தந்தைக்கும், குழந்தையாக வளர்ந்து வரும் மகளுக்கும் இடையே என்னென்ன பிரச்சினைகள் வரும், அதை மகள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், மகள்  தன் தந்தையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை இயல்பாகப் பதிவு செய்யும் படம் பிகு. இதில் இர்ஃபானின் நடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

லைப் ஆஃப் பை(LIFE OF PI)

ஒரு நாவல் சிறந்த படமாவது அரிது. ஆனால், இயற்கையின் பிரம்மாண்டத்தை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கும் படம், இது. இதில் இஃபானின் ‘பை’ கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார்.

பான் சிங் தோமர்(PAAN SINGH TOMAR)

பான் சிங் தோமாராக இஃபானின் நடிப்பு ஒரு குறையும் இல்லாமல் இருக்கும். ஒரு விளையாட்டு வீராராக தன்னை வெளிப்படுத்தும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை, விளையாட்டு, சமூக பங்களிப்பு என நீளும் இதன் கதை.

 

இர்ஃபானின் தனிச் சிறப்பே, அவர் பேசும் இந்தி மொழியில் கூட அவ்வளவு வித்தியாசம் காட்டிருப்பார். பெங்காலி மொழியிலும் சிறப்பாக பேசியிருப்பார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!Puri Jagannath temple Ratna Bhandar : பொக்கிஷ அறை திறப்பு! கொட்டிக் கிடக்கும் தங்கம்! மர்மம் விலகுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தார்களா யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா? போலீசில் புகார்!
"டிகிரியால் பயன் இல்ல.. பஞ்சர் கடை வையுங்க" மாணவர்களுக்கு பாஜக எம்எல்ஏ அட்வைஸ்!
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
Nicholai Sachdev : என் பெயருடன் வரலட்சுமி பெயர் சேர்க்கிறேன்.. நிக்கோலாய் சச்தேவ் பளிச்..
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Watch Video: என்னம்மா இப்படி பண்றீங்களேமா! சாலையின் நடுவே ரீல்ஸ் செய்த பெண்ணால் கீழே விழுந்த வாகன ஓட்டி!
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Mohan G : கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
Embed widget