(Source: ECI/ABP News/ABP Majha)
'என்ன அழகு எத்தனை அழகு..' கங்குபாய் காத்யாவாடியை ரீ-க்ரியேட் செய்த மாடல் அழகிகள்!
Gangubai Kathiawadi: நடிகை ஆலியாவின் அற்புதமான நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கங்குபாய் படத்தின் லுக்கை சில பெண்கள் ரீ-க்ரியேட் செய்துள்ளனர்.
கங்குபாய் கத்தியவாடி:
பாலிவுட்டின் முன்னனி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் ஆலியா பட். பிரபல இயக்குனர் மகேஷ் பட்-நடிகை சோனி ரஸ்தானின் மகளான இவர், கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடன்ட் ஆஃப் தி யியர் படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். அப்படியே படிப்படியாக அவருக்கு முன்னனி ஹீரோக்களுடன் வெவ்வேறு படங்களில் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த படங்கள் பல மெகா ஹிட் ஆக அமைந்தன.
ஆலியாவிற்கு, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே திருப்புமுனையாக அமைந்த படம் கங்குபாய் காத்யாவாடி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த இப்படம், உண்மை சம்பவங்களையும் கதாப்பாத்திரங்களையும் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாகவும், பின்பு அரசியலில் நுழையும் சக்திவாய்ந்த பெண்ணாகவும் நடித்திருந்தார் ஆலியா. இவரது நடிப்பும், துணிச்சலும் பலராலும் பாராட்டப்பட்டது. சிலர், படத்தின் கருவை புரிந்து கொள்ளாமல் திட்டித் தீர்த்தாலும் படம் என்னவோ உலகளவில் 200கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
அம்மாவான ஆலியா!
பாலிவுட்டின் ஃபேன்ஸ் ஃபேவரட் ஜோடிகளில் ஒருவரான ரன்பீர் கபூர் - அலியா பட் ஜோடி கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தொடர்ந்து ஜூன் மாதம் தான் கருவுற்றிருப்பதை அறிவித்த அலியா, முன்னதாக படு சுறுசுறுப்பாக பிரம்மாஸ்திரா, டார்லிங்ஸ் பட ப்ரோமோஷன் பணிகளில் பங்குபெற்று வந்தார்.
இந்நிலையில், இம்மாதம் 6ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றோராகிவிட்டதாக ஆலியா பட் தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் தெரிவித்தார். ஆலியா-ரண்பீர் கபூர் ஜோடிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து ஸ்டேடஸ்களையும் லைக்ஸ்களையும் அள்ளி குவித்தனர்.
கங்குபாய் ரேம்ப் வாக்:
View this post on Instagram
கங்குபாய் படத்தில் ஆலியாவின் ஹைலைட்டாக காண்பிக்கப்பட்டது, அவருடைய முகத்தில் இருந்த பெரிய பொட்டும், அவர் உடுத்திய வெள்ளை புடவையும்தான். சமீப காலங்களில் சிலர் அந்த லுக்கை ரீ-க்ரியேட் செய்து தங்களது இன்ஸ்டா பக்கங்களில் ரீல்ஸ் செய்து வந்தனர். அந்த வகையில், தற்போது ருசிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில், கங்குபாயின் ஸ்டைலில், பெரிய பொட்டு வைத்தவாரும் வெள்ளை புடவை அணிந்தவாரும் மாடல் அழகிகள் ரேம் வாக் செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.