குஜராத் தேர்தலில் ஜாம்நகரில் வென்ற மனைவிக்கு ஜடேஜா அளித்த பரிசு… ட்வீட் வைரல்!
ஆம் ஆத்மியின் கர்ஷன்பாய் கர்மூர் 23 சதவீத வாக்குகளுடன் அவருக்கு கடுமையான போட்டியை கொடுத்தார். மேலும் காங்கிரஸின் பிபேந்திரசிங் சதுர்சிங் ஜடேஜா 15.5 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
![குஜராத் தேர்தலில் ஜாம்நகரில் வென்ற மனைவிக்கு ஜடேஜா அளித்த பரிசு… ட்வீட் வைரல்! Jadeja gift to his wife who won the Jamnagar constituency in the Gujarat election Jadeja congratulatory tweet went viral குஜராத் தேர்தலில் ஜாம்நகரில் வென்ற மனைவிக்கு ஜடேஜா அளித்த பரிசு… ட்வீட் வைரல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/f31ec7dd70c5c9516efa9d1f331568a31670573107121109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், குஜராத் சட்டசபை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான ரிவாபா ஜடேஜா 57 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்று எம்.எப்.ஏ. ஆகியுள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா அவருக்கு ஒரு பரிசை அளித்துள்ளார்.
வெற்றி பெற்ற ஜடேஜா மனைவி
ஆம் ஆத்மி கட்சியின் கர்ஷன்பாய் கர்மூர் 23 சதவீத வாக்குகளுடன் அவருக்கு கடுமையான போட்டியை கொடுத்தார். மேலும் காங்கிரஸின் பிபேந்திரசிங் சதுர்சிங் ஜடேஜா 15.5 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரி சிங் சோலங்கியின் உறவினரான ரிவாபா ஜடேஜா 2019 இல் பாஜகவில் இணைந்தார். மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பாலும் காங்கிரஸ் ஆதரவாளர்களைக் கொண்ட குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். முன்னதாக, அவரது மாமனார் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த வீடியோ வைரலானது. காங்கிரஸ் தலைவரான அவரது மைத்துனி நைனாபா ஜடேஜாவும் தனது கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தார்.
ஒரே குடும்பத்தில் காங்கிரஸ்-பாஜக ஆதரவு
ஜாம்நகரில் கருத்தியல் வேறுபாடுகளுடன் இதுபோன்ற பல குடும்பங்கள் இருப்பதால் ஜாம்நகரில் இது "ஜடேஜா வெர்சஸ் ஜடேஜா" அல்ல என்று அவரது மைத்துனி நைனாபா ஜடேஜா கூறியிருந்தார். "என் அண்ணன் மீதான என் அன்பு அப்படியே இருக்கிறது. என் மைத்துனி இப்போது பாஜக வேட்பாளர். ஒரு மைத்துனியாக அவர் நல்லவர்," என்று அவர் கூறியிருந்தார். "எங்கள் குடும்பத்தில், எங்களுக்கு சுதந்திரம் உள்ளது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனைச் செய்யலாம். அதைச் செய்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது" என்று நைனபா ஜடேஜா மேலும் கூறினார்.
வதந்திகளை துடைத்தெறிந்த ரிவாபா
அவரது மாமனார் காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்கும் வீடியோ வெளிவந்த உடனேயே, பல வதந்திகள் எழும்பின. ரிவாபா ஜடேஜா குடும்பத்திற்குள் ஒரு பகையை கிளப்புகிறார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் அப்போதே உடனே அது குறித்து வெளிப்படையாக பேசிய ரிவாபா ஜடேஜா வதந்திகளை துடைத்தெறிந்தது மட்டுமின்றி, அவரது கணவர் ஜடேஜா அவருக்கு ஆதரவளிப்பதாகக் கூறினார்.
Hello MLA you truly deserve it. જામનગર ની જનતા નો વિજય થયો છે. તમામ જનતા નો ખુબ ખુબ દીલથી આભાર માનુ છુ. જામનગર ના કામો ખુબ સારા થાય એવી માં આશાપુરા ને વિનંતી. જય માતાજી🙏🏻 #મારુજામનગર pic.twitter.com/2Omuup5CEW
— Ravindrasinh jadeja (@imjadeja) December 9, 2022
ஜடேஜா ட்வீட்
இந்த நிலையில் தேர்தலில் வென்ற அவருக்கு கணவர் ரவீந்திர ஜடேஜா ஒரு பரிசை வழங்குவதுபோல ட்வீட் செய்துள்ளார். அந்த டீவீட்டில், "ஹாய் எம்எல்ஏ, அதற்கு முழு தகுதியும் உனக்கு உண்டு. ஜாம்நகர் மக்கள் வென்றுள்ளனர். எல்லா மக்களுக்கும் என் அடி மனதில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜாம் நகர் பகுதியின் வளர்ச்சிக்காக நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்", என்று எழுதி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், எம்.எல்.ஏ. குஜராத் என்று எழுதப்பட்ட ஒரு சிறிய பெயர் பலகையை அவர் அவருக்கு பரிசளிக்கிறார். தொடர்ந்து ஏழாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை அடைய பாஜக தயாராகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் பாஜக 158 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு முன்பு 1985ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சியே சாதனை படைத்திருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)