Cyclone Mandous: சென்னைக்கு 270 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்.. தொடரும் மழை.. லேட்டஸ்ட் அப்டேட்..
சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து கொண்டு வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![Cyclone Mandous: சென்னைக்கு 270 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்.. தொடரும் மழை.. லேட்டஸ்ட் அப்டேட்.. Cyclone Mandous News TN Puducherry Karaikal to Receive Rain as Cyclone Moves Across Coast Between Puducherry Sriharikota today Night Cyclone Mandous: சென்னைக்கு 270 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்.. தொடரும் மழை.. லேட்டஸ்ட் அப்டேட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/e90eff5a366d0f5ee9aa04de7be9ab941670556927355589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து கொண்டு வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டிருந்தது. இது திருகோணமலைக்கு (இலங்கை) வடக்கு-வடகிழக்கே சுமார் 270 கி.மீ., யாழ்ப்பாணத்திலிருந்து 230 கி.மீ கிழக்கு-வடகிழக்கே (இலங்கை), காரைக்காலில் இருந்து கிழக்கே 200 கி.மீ. மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடக்கும்
மேலும் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் என இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலானது, மேற்கு-வடமேற்கு திசையை கடந்து, வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே கரையை கடக்க கூடும் என ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 7 செ.மீ, பெரம்பூரில் 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னை டிஜிபி அலுவலகம், எம்.ஜி.ஆர் நகர், ஆலந்தூர், அயனாவரம் தாலுகா அலுவலக பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)