Jos Alukkas Robbery: வேலூர் ஜோஸ் ஆலுகாஸ் நகை கடை சுவரை உடைத்து 30 கிலோ தங்கம் கொள்ளை
கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற திசை குறித்து அறிய வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிம்பா கடையின் பின்புறம் இருந்து கால்வாய் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வேலூர் பழைய பஸ்சாலையில் நின்றது
வேலூர் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடையில் துளை போட்டு 30 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடையின் பின் பக்க வெண்டிலேட்டர் குழாய் மூலம் புகுந்து பால் சீலிங்கை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் குறித்த தடயங்களை மோப்ப நாய் மற்றும் கைரேகை நிருணர் குழுவினர் உதவியுடன் சேகரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற திசை குறித்து அறிய வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிம்பா கடையின் பின்புறம் இருந்து கால்வாய் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வேலூர் பழைய பஸ்சாலையில் நின்றது.