மூட்டை மூட்டையாக சிக்கிய பீடி இலைகள்! இலங்கைக்கு கடத்த முயற்சி! தட்டித்துக்கிய போலீஸ்: எப்படி?
ரூ.15 லட்சம் மதிப்பிலான 80 பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

காயல்பட்டணம் ஓடக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 15 லட்சம் மதிப்பிலான 80 மூட்டை பீடி இலைகளை க்யூ பிராஞ்ச் போலீசார் பறிமுதல் செய்தனர். படகு, அரசால் தடை செய்யப்பட்ட அதிக திறன் கொண்ட இன்ஜின் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக மீனவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் பீடி இலைகள், கஞ்சா போன்ற போதை பொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவது தொடர்கதையாகி விட்டது. அவ்வப்போது போதை பொருள் தடுப்பு போலீசார் ஆகியோர் சோதனை நடத்தி பீடி இலைகள் கஞ்சா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர் இந்நிலையில் காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரையிலிருந்து பீடியிலைகள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சி நடப்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து க்யூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா, சப் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், ஏட்டு ராமர், இருதயராஜகுமார், போலீசார் பழனி பாலமுருகன் ஆகியோர் காயல்பட்டணம் ஓடக்கரை கடற்கரை பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஓடக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகில் பீடி இலைகளை ஏற்றிக்கொணடிருந்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் அந்தோணி துரை(40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ.15 லட்சம் மதிப்பிலான 80 பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் படகு, அதிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 40 ஆர்ட்ஸ் பவர் கொண்ட இன்ஜினை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என க்யூ பிராஞ்ச் போலீசார் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

