மேலும் அறிய

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி

தானிப்பாடி அருகே விவசாயி சொந்த நிலத்தை அவருக்கே விற்பனை செய்த மூதாட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய சகோதரர்கள் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாரந்தோறும் மக்கள் மனு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் வளாகத்தின் நுழைவு வாயிலில் விவசாயி ஒருவர் தங்களுடைய விவசாய  நிலத்தை மீட்டு தரக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி என இரண்டு நபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற நபர்கள் அளித்த மனுவில். திருவண்ணாமலை, மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா தானிப்பாடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சேகர் ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 1996-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் அண்ணாமலை கவுண்டர் , அலமேலு என்பவரிடம் 1 ஏக்கர் 76 சென்ட் விலைநிலம் விலைக்கு வாங்கியுள்ளனர்.  ஆனால், இருசகோதர்களின் பூர்வீக சொத்து 50 சென்ட் இவர்களுக்கே முறைகேடாக அலமேலு விற்பனை செய்துள்ளார். படிப்பறிவு இல்லாத இவர்களை இவர்களின் இடங்களை முறைகேடாக விற்பனை செய்துள்ளனர். இதனை அறிந்த சகோதரர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். வாங்கிய விவசாய நிலத்திற்கு அளிக்க கூடிய UDR பட்டா 3103 விடுபட்டுள்ளது. 

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள்  தீக்குளிக்க முயற்சி

அதனைத் தொடர்ந்து சகோதரர்களிடம் அளிக்கப்டட் UDR பட்டா நிலத்தை விற்பனை செய்த அலமேலு பெயரிலே பட்டா வழங்கப்பட்டுள்ளது. வழங்கிய பட்டா குறித்து ராஜேந்திரன் மற்றும் சேகர் ஆகிய இருவருக்கும் தெரியவில்லை. மேலும் இந்த விவசாய நிலத்தை (02.03.2022) அன்று அலமேலு பெயரில் இருந்த பட்டா அலமேலு மகள் காளியம்மாள் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. பட்டா மாற்றப்பட்ட தில்லு முல்லு ராஜேந்திரனுக்கும், சேகருக்கும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அலமேலுவிடம் சென்று விவசாய நில விற்பனை மோசடி குறித்தும் எங்களுடைய இடத்தை தங்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்து விடு என்று கேட்டுள்ளனர். அதன் பிறகு அலமேலு பேரன் வேடியப்பன் மற்றும் சேகர் ஆகிய இருவரும் சேர்ந்து தானியம் பாடியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் அருணாச்சலம் மற்றும் சில நபர்களை வைத்து நிலத்தை பற்றி கேட்க கூடாது அப்படியும் மீறி நீங்கள் கேட்டால் அண்ணன், தம்பி உங்கள் இருவரையும் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள்  தீக்குளிக்க முயற்சி

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் , வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தேன். ஆனால் அதிகாரிகள் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியும், எங்களுடைய விவசாய நிலத்தை மீட்டு தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மேலும் தீக்குளிக்க முயன்றவர்களை காவல்துறையினர் மீட்டு அவர்களின் மீது தண்ணீர் ஊற்றி பின்னர் விசாரனைக்காக காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget