மேலும் அறிய

பாபநாசம் பாணியில் நண்பரை கொன்றவர், 3 ஆண்டுகளுக்கு பின் சரண் - தோண்டி எடுக்கப்பட்ட சடலம்..

’’மணியின் மனைவி உடன் திருப்பதி கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தெரிந்து கொண்ட மணி இருவரையும் எச்சரித்துள்ளார்’’

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த வீரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (41). இவர் கூலிதொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் பலாமரத்தூர் கிராமம் தோப்பூரில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் அவர் அன்று மாலை 6 மணியளவில் அங்கிருந்து திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு வந்துள்ளார். ஆனால் அவர் வீடுக்கு வந்து சேரவில்லை. இது குறித்து அவருடைய உறவினர்கள் பல இடத்தில் தேடியுள்ளனர் ஆனால் திருப்பதியை எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து திருப்பதியின் மகன் வீரமணி ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

பாபநாசம் பாணியில் நண்பரை கொன்றவர், 3 ஆண்டுகளுக்கு பின் சரண் - தோண்டி எடுக்கப்பட்ட சடலம்..

இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காணாமல் போன திருப்பதியின் மோட்டார் சைக்கிள் சமீபத்தில் செங்கம் துக்காபேட்டையில் உள்ள சைக்கிள் நிறுத்தத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலையில் பலாக்கனூர் கிராமத்தை சேர்ந்த மணி என்ற ராமசாமி (32) என்பவர் புலியூர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரண் அடைந்து காணாமல் போனதாக கூறப்படும் திருப்பதியை நான் தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் அவரை ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில்  ஒப்படைத்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சரண் அடைந்த மணியும், காணாமல் போனதாக கூறப்படும் திருப்பதியும் நண்பர்கள். மணி திருமணமானவர். இருவரும் குடிப்பழக்கம் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் அவ்வபோது ஒன்றாக இணைந்து மது அருந்தி வந்துள்ளனர்.

பாபநாசம் பாணியில் நண்பரை கொன்றவர், 3 ஆண்டுகளுக்கு பின் சரண் - தோண்டி எடுக்கப்பட்ட சடலம்..

ஒரு நாள் மணி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். சென்ற வேளையை முடித்து விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளர். அப்போது மணியின் மனைவி உடன் திருப்பதி கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தெரிந்து கொண்ட மணி இருவரையும் எச்சரித்துள்ளார். இருப்பினும் அவர்கள் கள்ளத் தொடர்பை விடமால் தொடர்பில் இருந்து வந்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மணி, சம்பவத்தன்று மது போதையில் இருந்த திருப்பதியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். அதன் பிறகு திருப்பதியின் உடலை மணி  வீட்டின் பின்புறம் புதைத்து உள்ளார். காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்து பயந்து போய் சரண்டைந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் நேற்று  திருப்பதியின் உடல் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பிரேதபரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணி என்ற ராமசாமியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஜமுனாமரத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget