மேலும் அறிய

கிரிக்கெட் மட்டையால் மனைவி அடித்துக் கொலை? - ஆடி கார் கேட்டு கணவன் கொடுமை...!

கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுவதாக இறந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

சேலம் மாவட்டம் ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனஸ்ரீயா (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனஸ்ரீயா, பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று சமாதானம் செய்து கணவர் கீர்த்திராஜ் மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு தனஸ்ரீயா தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் மட்டையால் மனைவி அடித்துக் கொலை? - ஆடி கார் கேட்டு கணவன் கொடுமை...!

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேரில் சென்று பார்த்தபோது, தனஸ்ரீயா தலைப் பகுதி மற்றும் உடல் முழுவதும் ஆங்காங்கே காயங்கள் இருந்துள்ளது. இதுதொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தனஸ்ரீயாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தனஸ்ரீயாவின் கணவர் கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் மட்டையால் மனைவி அடித்துக் கொலை? - ஆடி கார் கேட்டு கணவன் கொடுமை...!

இதுகுறித்து கூறிய தனஸ்ரீயாவின் பெற்றோர், திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே தங்களது மகள் மகிழ்ச்சியாக இருந்தார். அதன்பின் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமை செய்து வந்ததாகவும், வரதட்சணையாக ஆடி கார் கேட்டு வந்த நிலையில் ஒரு மாத காலமாக மகள் வாழப்பிடிக்காமல் தங்களது வீட்டில் இருந்து வந்ததாகவும், நேற்று மாலை 6 மணிக்கு திட்டமிட்டு தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று இரவு 8:30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கீர்த்திராஜ் தெரிவித்துள்ளார். அதனையடுத்து வீட்டுக்குச் சென்று பார்த்த போது உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். வீடு முழுவதும் ரத்தமாக இருந்தது. வீட்டிலிருந்து கிரிக்கெட் மட்டையிலும் ரத்தம் இருந்தது. கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. வரதட்சணை கொடுமையால் கொடூரமாக தனது மகளை கொலை செய்தவரை கைது செய்து, மரணத்திற்கு முறையான விசாரணை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

3 ஆம் ஆண்டு திருமண நாளன்று வரதட்சனை கொடுமையால் மனைவியை கணவன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Embed widget