Crime: கிரிவலம் வந்த ஆந்திரா பெண்ணிடம் வழிப்பறி.. சிக்கிய போலி சாமியாரை நையப்புடைத்த பக்தர்கள்..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் வந்த ஆந்திரா பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுப்பட்ட போலி சாமியாரை நையப் புடைத்த பக்தர்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை (Tiruvannamalai News) உலக புகழ் பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.. மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் பௌர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் செல்வார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலை அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்யவும் கிரிவலம் செல்லவும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் அதிகளவில் கிரிவலம் வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் லாவண்யா, வயது (50).இவர், தன் உறவினர்களுடன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு வந்தார்.நேற்று இரவு, சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வந்துக்கொண்டு இருந்துள்ளார்.
போலி சாமியார் பெண்ணிடம் வழிபறி
அப்போது இரவு கிரிவலப்பாதையில், துர்வாச முனிவர் கோவில் அருகே சென்றுகொண்டு இருந்தார்., இயற்கை உபாதை கழிக்க, காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். பின்பு, அங்கு மது போதையில் இருந்த போலி சாமியார் ஒருவர், திடிரென அங்கு வந்ததால் லாவண்யா அதிர்ச்சி அடைந்தார். பின்பு லாவண்யாவிடம் போலி சாமியார் வழிப்பறியில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. லாவண்யா பணம் கொடுக்க மறுத்துள்ளதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போலி சாமியார் லாவண்யாவை கீழே தள்ளியுள்ளார் லாவண்யா படுகாயமடைந்தார்.லாவண்யா மற்றும் அவருடன் சென்ற மற்றொரு பெண் கூச்சலிட்டனர். கூச்சல் சத்தம் கேட்டவுடன் கிரிவலம் சென்று கொண்டுயிருந்த பக்தர்கள் உடனடியாக அங்கு சென்று லாவண்யாவை போலி சாமியாரிடம் இருந்து லாவண்யாவை காப்பாற்றிய பக்தர்கள் போலி சாமியாருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
போலி சாமியார் மருத்துவமனையில் அனுமதி
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் விசாரிக்கையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்றோம், அங்கு இருந்த சாமியாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்ட்டுள்ளார். மேலும் திருப்பதியை சேர்ந்த பெண்ணிற்கு கையில் சிராய்ப்பு இருந்தது அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கவில்லை என்றும் போலி சாமியார் திருக்கோவிலுாரைச் சேர்ந்த பாபு வயது (47) என்பதும் போலி சாமியாராக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சுற்றி வந்ததும் தெரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Indian Air Force: இளைஞர்களே.. இந்திய விமானப்படையில் அக்னி வீர்வாயு பிரிவில் வேலை.. 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..!