மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்கா?.. சக்சஸ் பார்ட்டியில் ரகசியம் சொன்ன நடிகை.. வைரல் வீடியோ
சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை மிருணாள் தாகூர் பிரபல தமிழ் நடிகருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டி நடித்து வரும் பிரபல நடிகை மிருணாள் தாஹூர் நேரடி தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறிவிட்டார். அவரது நடிப்பில் வெளியான சீதா ராமம், ஹாய் நானா போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. சீதா ராமம் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அவரது சின்ன சின்ன குறும்புகளும், நடனமும் ரசிக்கும்படியே இருந்தது. இந்நிலையில், இவர் டைவர்ஸ் ஆன தமிழ் நடிகருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் ஆஃப் சர்தார் 2 பட நிகழ்ச்சி
இதுவரை எந்த கிசுகிசுக்களில் சிக்காத நடிகையாக இருந்தவர் மிருணாள் தாகூர். சமீபகாலமாக டைவர்ஸ் ஆன தமிழ் நடிகருடன் சேர்த்து வைத்து பேசப்படுகிறது. யார் அந்த நடிகர் என்று எல்லோரும் தேடும் நேரத்தில் மிருணாள் தாஹூர் நடிப்பில் வெளியான சன் ஆஃப் சர்தார் 2 பட நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் விசிட் தந்தார் தனுஷ். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மிருணாள் தாஹூர் தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷூம் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மிருணாள் தாஹூருடன் தனுஷ் டேட்டிங்கா?
அதே போன்று மும்பையில் நடந்த சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் பிரிமீயர் நிகழ்ச்சியிலும் தனுஷ் விசிட் தந்ததோடு இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. அப்போது மிருணாள் தாஹூர் தனது சகோதரரை மீடியாவிற்கு அறிமுகப்படுத்தினார். மேலும், தனுஷின் பக்கம் சாய்ந்து மிருணாள் அவரிடம் ஏதோ சொல்வது போன்ற வீடியோவை ஷேர் செய்து, மிருணாள் தாக்கூருடன் தனுஷ் டேட்டிங்கா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக தனுஷ் கலந்துகொள்ளும் அனைத்து பார்ட்டிகளிலும் மிருணாள் தாஹூர் தவறாமல் கலந்துகொள்வது தான் பேசுபொருளாகியுள்ளது.
இரவு பார்ட்டி நிகழ்ச்சி
பாலிவுட் இயக்குநர் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மே படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இதுதொடர்பாக நடந்த இரவு பார்ட்டியில் மிருணாள் தாகூர் கலந்துகொண்டார். இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. எனவே அடுத்தடுத்து நிகழ்வுகளில் இருவரும் சேர்ந்தே வருவதால் கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர்.
Dhanush and Mrunal Thakur are dating? pic.twitter.com/ItWYJdsm8a
— Aryan (@Pokeamole_) August 3, 2025





















