மேலும் அறிய
Advertisement
என்கிட்ட பேசமாட்டியா..? நண்பனின் மனைவியை நடுரோட்டில் குத்திக்கொலை செய்த இளைஞர்..!
மறைமலை நகர் அருகே கள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு காவல் நிலையம் வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் (வயது 26) இவருடைய மனைவி தாரணி (வயது 21). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சுந்தர் கூலி வேலை செய்து வருகிறார். செங்கல்பட்டு அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் மல்ரோசாபுரம் பகுதியை சேர்ந்த பாளையம் என்பவரின் மகனான சுதீன் (வயது 29) மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர் நண்பர்கள் இருவரும் அவ்வப்போது வெளியே சென்று மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நண்பனின் மனைவியுடன் காதல்:
மேலும் அவ்வப்போது சுதீன் சுந்தரின் வீட்டிற்கு சென்று வருவதையும் வாடிக்கையாக கொண்ட நிலையில் சுந்தரின் மனைவி தாரணியிடமும் சுதீன் நட்பு பாராட்டியும் வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரின் மனைவி தாரணியிடம் இருந்த நட்பானது, நாளடைவில் பின்பு எல்லை கடந்த அன்பாக மாறி இருவரும் கள்ளக்காதலர்களாக இருந்து வந்துள்ளனர். கள்ளக்காதலர்களான இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளனர்.
மேலும் தாரணியின் கணவர் சுந்தருக்கு இருவரின் கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக தெரிய வந்ததை அடுத்து இருவரையும் அவர் கண்டித்துள்ளார். மேலும் சுதீன் உடனான தொடர்பையும் தாரணி சமீப நாட்களாக துண்டித்துள்ளார். இந்நிலையில் இன்று சுந்தரின் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு தனது கள்ளக்காதலியான தாரணியிடம், என்னிடம் ஏன் வழக்கம் போல பேசுவது கிடையாது, என்னை விட்டு ஏன் விலகி செல்கிறாய் என கூறி கள்ளக்காதலன் சுதீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
குத்திக்கொலை:
இந்நிலையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள்மனை ஆகியவற்றை கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தனது கள்ளக்காதலியான தாரணியின் மார்பு,வயிறு,கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியதில் அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து தாரணி பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார்.
இதனையடுத்து தனது கள்ளக்காதலியை ஆத்திரம் தீர கொலை செய்த சுதீன் மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு தானே நேரில் சென்று கொலை செய்தது குறித்து தகவல் தெரிவித்து சரணடைந்தார். அதனையடுத்து கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலை நகர் போலீசார் கொலை செய்யப்பட்ட தாரணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மறைமலை நகர் போலீசார் சுதீனை கைது செய்தும்,அவரிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனின் மனைவியும், கள்ளக்காதலியுமானவரை கள்ளக்காதலனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion