Nammai kaakkum 48 Scheme:தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு.! ரூ.2 லட்சமாக அதிகரிப்பு: நம்மை காக்கும் 48 திட்டத்தில் அரசாணை
Innuyir Kappom-Nammai kaakkum 48: இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ், முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சையை ரூ. 2லட்சமாக அதிகரித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிக்சைக்கான கட்டணம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதையடுத்து இந்த திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48
இதையடுத்து, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தை கொண்டுவந்தார்.
இந்த திட்டத்தின் கீழ், விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையிலும் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில், விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்தில் விரைவான மற்றும் சிறப்பான சிகிச்சை வகையில் இன்னுயிர் காக்கும் நம்மை காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனையாக இருந்தாலும், ரூ. 1லட்சம் வரை இலவச அளிக்கப்படும் என முதலில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது அதை ரூ. 2லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இலக்கு:
விபத்துகளால், இறப்பு விகிதத்தை 2030 ஆம் ஆண்டில் 30 சதவீதமாகக் குறைக்கத் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையி, தொற்றா நோய்களான சாலை விபத்து, தற்கொலை போன்றவற்றால் இறப்பு விகிதத்தை குறைக்கும் விதமாக காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்படும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதற்கு இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தருணத்தில், அதற்கான தொகையை , தமிழ்நாடு அரசு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. லட்சமாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?