மேலும் அறிய
Advertisement
Tungsten Protest: டங்ஸ்டன் போராட்டத்திற்கு முடிவு எப்போது? - மக்கள் கோரிக்கை என்ன தெரியுமா?
மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - இல்லை என்றால் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றனர்.
மேலூர் பகுதியில் டங்ஸ்டம் எடுக்கப்படாது என்று உறுதியை தரவேண்டும் என்ற கோரிக்கை தெரிவித்தனர். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.
தமுக்கம் நோக்கி பேரணி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, அ. வல்லாளபட்டி உள்ளடக்கிய ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு, மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மறு ஆய்வு செய்ய மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு செய்தது. முழுமையாக மேலூர் பகுதியில் ரத்து செய்யக்கோரி, மேலூர் அருகே நரசிங்கப்பட்டியில் இருந்து மதுரை தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக சென்று அங்கு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தடை மீறி பேரணி
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைந்தால் வேளாண்மை பாதிப்படையும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேலூர் ஒருபோக பாசன பகுதி அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நரசிங்கப்பட்டியில் ஒன்று கூடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து மதுரை நோக்கி நான்கு வழிச்சாலையில் பேரணியாக செல்ல முற்பட்டனர். நடைபயண பேரணிக்கு காவல்துறை ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்களில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். போலீசார் தடுப்புகளை மீறி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பேரணியாக நான்கு வழிச்சாலையில் மதுரை நோக்கி சென்று கொண்டிருக்கிறனர். காவல்துறையினர் தடுத்து முற்பட்டபோதும் பொதுமக்கள் தடை மீறி மதுரை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து ஒரு வழி பாதையில் வானங்கள் இயக்கப்பட்டது. மதுரை எஸ்.பி அரவிந்தன் மற்றும் தேனி எஸ்பி சிவ பிரசாத் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம் அறிவிப்பு
தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற சாலை வழியாக மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே விவசாயிகள் ஒன்று கூடி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாற்று வழியாக வந்த விவசாயிகளை உள்ளே, அனுமதிக்க மறுத்த காவல்துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கண்டன கோசங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை தலைமை தபால் நிலையம் அருகே ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைக்கப்பட்டது. இனியும் மத்திய அரசு டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யவில்லை, என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்.
போராட்டக்குழுவின் கோரிக்கை என்ன
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவிக்க வேண்டும், சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஜி.ஓ.வாக வெளிடவேண்டும், எப்போதும் இனி மேலூர் பகுதியில் டங்ஸ்டம் எடுக்கப்படாது என்று உறுதியை தரவேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - விஷாலின் இந்த நிலைமைக்கு பாலா தான் காரணமா ? உண்மையை உடைத்த பிரபலம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion