விஷாலின் இந்த நிலைமைக்கு பாலா தான் காரணமா ? உண்மையை உடைத்த பிரபலம்
விஷாலின் மோசமான உடல் நிலைக்கு முழு காரணம் பாலா இயக்கிய அவன் இவன் படம் தான் என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விஷால்
ஆறடி உயரத்தில் ஃபிட்டான உடலும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் விஷால். செல்லமே , சண்டகோழி , திமிரு , தாமிரபரணி , சத்யம் ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தார். இடையிடையில் சில படங்கள் தோல்வியை தழுவினாலும் அவ்வப்போது சில வெற்றிப்படங்களையும் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் பெரியளவில் வெற்றிபெற்றது . தற்பொது வரும் ஜனவரி 10 ஆம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் மதகஜராஜா படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பி விஷால் கை நடுக்கத்துடன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து விஷாலின் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன.
பாலாதான் காரணமா ?
அந்த வகையில் வலைப்பேச்சு அந்தணன் விஷாலின் உடல் நிலைக்கு இயக்குநர் பாலா இயக்கிய அவன் இவன் படம்தான் காரணம் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. " அவன் இவன் படம் எடுக்கப்பட்டபோது பாலா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். பாலா படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் பெரும் ஆர்வம் காட்டினார்கள். அவர் சொன்னால் மலையிலிருந்து குதிக்க கூட நடிகர்கள் தயாராக இருந்தார்கள். இந்த சூழலில் தான் அவன் இவன் படத்தில் விஷால் நடித்தார். இந்த படத்தில் அவர் மாறுகண் உள்ளவராக விஷால் நடித்தார். விஷால் தனது கண்களை அப்படி வைத்து நடித்தார் என்றுதான் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சையின் மூலம் விஷாலின் கண்கள் அப்படி மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது . இந்த படத்தில் நடித்த பிறகுதான் விஷாலுக்கு உடல் ரீதியாக நிறைய பிரச்சனைகள் வந்தது. பல வருடங்கள் அவர் ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்பட்டார். இந்த வலியை சமாளிக்க அவர் சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையானார். அதுதான் அவரை தற்போது இந்த நிலைமையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது" என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்
Sad Truth - Vishal!!#AvanIvan
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 6, 2025
pic.twitter.com/Kygkrty845