மேலும் அறிய

கடவுள்களே கையேந்தி நிற்பதா? 13 ஆண்டு தவம்: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை!

part time teachers: பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது முடியாத காரியமல்ல.  இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.450 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும்.

13 ஆண்டு தவத்திற்கு வரம் வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை மற்றும் பணி நிரந்தரம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நிலையில், பொங்கல் திருநாளையொட்டி தங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு ஆய்வு செய்ய மறுக்கிறது. தமிழக அரசின் மனித நேயமற்ற இந்த அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பணி நிரந்தரமே பிரதானக் கோரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. 

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், 181-ஆம் வாக்குறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சொல்வதைச் செய்வதாகக் கூறிக் கொள்ளும் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால், அடக்குமுறையைத்தான் பரிசாக அளிக்கிறது திமுக அரசு.

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது முடியாத காரியமல்ல.  இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.450 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். இது 2024-25ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகையான ரூ.44 ஆயிரத்து 42 கோடியில் ஒரு விழுக்காடு மட்டும்தான்.  ஆனாலும் அதை செய்ய தமிழக அரசுக்கு மனம் வரவில்லை.

அப்பட்டமான மனித உரிமை மீறல்

அமைப்பு சார்ந்த சிறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் கூட, அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர் படிப்பு என எண்ணற்ற தகுதிகளுடன் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த உரிமைகள் எதுவும் கிடையாது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலா, இல்லையா? என்பதை தமிழக அரசு தான் விளக்க வேண்டும்.

கடவுள்களே கையேந்தி நிற்பதா?

பகுதி நேர ஆசிரியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் மிகக்குறைந்த  ஊதியம் அவர்களின் குடும்பச் செலவுகளுக்கே போதாது எனும் நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதுதான் நியாயமாகும். ஆசிரியர்கள் கல்வி வழங்கும் கடவுள்கள். அவர்கள் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு, பொங்கல்  திருநாள் ஊக்கத்தொகை போன்றவற்றுக்காக கையேந்தி நிற்கும் நிலையை அரசு உருவாக்கக் கூடாது. அது அரசுக்கு தான் அவமானம்.

எனவே, பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் உடனடியாக காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும். அத்துடன் அவர்கள் பொங்கல் திருநாளை க் கொண்டாட அவர்களின் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். அதுதான் அவர்கள் 13 ஆண்டுகளாக செய்து வரும் தவத்திற்கு  அரசு வழங்கும் வரமாக அமையும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
TN Weather:இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
Chennai Weather: சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
TN Weather:இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
Chennai Weather: சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
TN Weather: இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
"காலம் மாறும்! பதில் சொல்லத் தயாரா இருங்க" அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை கண்டனம்
Embed widget