Arnav: வார்த்த ரொம்ப முக்கியம் ; பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் அளப்பறையை ஆரம்பித்த அர்னவ்! ரோஸ்ட் பண்ணிய ஹவுஸ் மேட்ஸ்!
பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ எண்ட்ரி கொடுத்த அர்னவ், வீட்டிற்குள் வந்ததும் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார். ஒட்டு மொத்த போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து சும்மா செஞ்சி விட்ட சம்பவம் தான் செம்ம ஹைலைட்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8:
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. கடந்த சில வாரங்களாக 2 போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி வைல்டு கார்டு எண்ட்ரி மூலமாக 6 போட்டியாளர்கள் என்று மொத்தமாக 24 போட்டியாளர்களுடன் களைகட்டியது. ஆரம்பத்தில் ஆண்கள் – பெண்கள் போட்டியாக பிக் பாஸ் 8 சீசன் தொடங்கியது. ஆனால், இதில் எந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இல்லாத நிலையில் ஆண்கள் – பெண்கள் போட்டிக்கு பிக் பாஸ் எண்டு கார்டு போட்டு, எல்லோரையும் ஒரே அணியாக மாற்றினார்.
8 பேர் மீண்டும் ரீ எண்ட்ரி:
இதையடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் பிரச்சனைகள் ஒருபக்கம் அனல் பறக்க ஆரம்பித்தது. காதல் காட்சிகளும் அரங்கேறின. தொடர்ந்து பிக் பாஸ் வீடே பரபரப்பாக காட்சி அளித்தது. ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றுப்பட்டு வந்த நிலையில் இப்போது வெளியில் சென்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் 8 பேர் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். பிக்பாஸ் நாக் அவுட் சுற்று என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மிட் வீக் எவிக்ஷன் மூலமும், இன்னும் 2 போட்டியாளர்கள் ரீபிலேஸ் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளதால் , வீட்டில் உள்ள போட்டியாளர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாட தயாராகி உள்ளனர்.
அர்னவ்:
இந்நிலையில் வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்த அர்னவ், வந்த வேகத்தில் ஒருவித பொறாமை குணத்துடன் மற்ற போட்டியாளர்கள் மீது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மீது தங்களின் கோவத்தை காட்டியதாகவே பார்க்கப்பட்டது. சந்தியாவை சட்டை போடாமல் இருப்பானே எங்கே அவன் என்றும், ஒருத்தன் நோண்டிகிட்டும் - தடவி கிட்டும் இருப்பானே எங்கே என காது கூசும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து... உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் அர்னவ்வை பாரபச்சம் இன்றி ரோஸ்ட் செய்து விட்டனர். ரோஷினி மற்றும் ஜாக்குலின் ஆகியோர் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, அருண் மற்றும் விஷால் மீது தான் அதிக படியான வஞ்சத்தை கொட்டி அவர்கள் ஒரு ஜால்ரா என்றும் அவர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்ட வந்திருப்பதாகவும் கூறினார். இந்த வாரம் எப்படியும் மக்கள் செல்வன் மற்ற போட்டியாளர்களை வறுத்தெடுப்பாரோ இல்லையோ... கண்டிப்பாக அர்னாவுக்கு மீண்டும் பாடம் எடுப்பார் என்பது தெரிகிறது.