மேலும் அறிய

Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!

பல்கலைக்கழகங்களில்‌ பயிலும்‌ மாணவ மாணவிகளின்‌ பாதுகாப்பை உறுதிசெய்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து பதிவாளர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ அமைச்சர்‌ செழியன்‌‌ தலைமையில்‌ நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில்‌ மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்‌, மாணவ மாணவிகளின்‌ பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ முனைவர்‌ கோவி. செழியன்‌ தலைமையில்‌ இன்று (07.01.2025) நாமக்கல்‌ கவிஞர்‌ மாளிகையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ அமைச்சர்‌ தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்‌ இந்திய அளவில்‌ உயர்கல்வியில்‌ தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கும்‌ வகையில்‌ சீரிய திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறார்கள்‌. மாணவ மாணவிகளின்‌ கல்வித்‌ தரம்‌ உயர வேண்டும்‌, மாணவ மாணவிகள்‌ கல்வி கற்க பொருளாதாரம்‌ ஒரு தடையாக இருக்கக்‌ கூடாது என்பதை கருத்தில்‌ கொண்டு புதுமைப்‌ பெண்‌, தமிழ்ப்‌ புதல்வன்‌, நான்‌ முதல்வன்‌ போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்‌.

இந்திய அளவில்‌ மட்டுமல்லாது தமிழ்நாட்டை உலக அளவில்‌ உயர்கல்வியில்‌ சிறந்த முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌ உயர்கல்வித்‌ துறை சார்பில்‌ பல்வேறு முன்னெடுப்புகள்‌ செய்யப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில்‌ நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில்‌ துரித நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும்‌ அறிந்தே.

கூர்நோக்கு பகுதிகளைக் கண்டறிக

இதுபோன்ற சம்பவங்கள்‌ எந்தவொரு கல்வி நிறுவனத்திலும்‌, நிகழாமல்‌ இருப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்வி நிறுவனங்களில்‌ இரவு நேரங்களில்‌ அனைத்து பகுதிகளிலும்‌ மின்விளக்குகள்‌, கண்காணிப்பு கேமராக்கள்‌ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌. குறிப்பாக கூர்நோக்கு பகுதிகள்‌ கண்டறியப்பட்டு அங்கு மின்விளக்குகள்‌ மற்றும்‌ கண்காணிப்பு கேமராக்கள்‌ அமைக்கப்பட வேண்டும்‌.

 கட்டாய அடையாள அட்டை

கல்வி நிறுவன வாளகத்திற்குள்‌ உள்‌ நுழைபவர்கள்‌ மற்றும்‌ வெளியே செல்பவர்களின்‌ தகவல்கள்‌ பதிவேட்டில்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌. வளாகத்திற்குள்‌ கண்டிப்பாக மாணவர்கள்‌ பேராசியர்கள்‌, பணியாளர்கள்‌ அனைவரும்‌ அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்‌. அவசர காலங்களில்‌ உதவும்‌ வகையில்‌ தமிழ்நாடு காவல்‌ துறையால்‌ உருவாக்கப்பட்டுள்ள "காவல்‌ உதவி" செயலியின்‌ பயன்பாடு குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்‌.

கல்வி நிறுவனங்களில்‌ பாதுகாப்பு பணியில்‌ ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள்‌ இரவு நேரங்களில்‌ தொடர்‌ ரோந்து பணியில்‌ ஈடுபட வேண்டும்‌, பாதுகாப்பு நடவடிக்கைகளில்‌ மாணவ மாணவிகளின்‌ ஆலோசனையினையும்‌ பெற்று அவற்றை செயல்படுத்த வேண்டும்‌ உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மேலும்‌ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, உயர்கல்வித்‌ துறையை மேலும்‌ செம்மைப்படுத்தவும்‌ பதிவாளர்களின்‌ ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அமைச்சர் செழியன் தெரிவித்தார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TNGASA Admission 2026: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; எப்படி?
TNGASA Admission 2026: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; எப்படி?
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
TN 12th Result 2026: தாமதமாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; எப்போது வெளியீடு? என்ன காரணம்?
TN 12th Result 2026: தாமதமாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; எப்போது வெளியீடு? என்ன காரணம்?
உயர்கல்வி மாணவர்களா? உதவித்தொகை பெற சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
உயர்கல்வி மாணவர்களா? உதவித்தொகை பெற சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor vs TVK : தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காததற்கு இது தான் முக்கிய காரணம்.! ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காததற்கு இது தான் முக்கிய காரணம்.! ஆளுநர் மாளிகை பரபரப்பு விளக்கம்
TVK VCK: தவிக்கும் தவெக... விசிக ஆதரவா? கம்யூனிஸ்டுகள் கையில்.. திருமா பரபரப்பு பேட்டி!
TVK VCK: தவிக்கும் தவெக... விசிக ஆதரவா? கம்யூனிஸ்டுகள் கையில்.. திருமா பரபரப்பு பேட்டி!
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது.!? விஜய் - ஆளுநர் சந்திப்பில் திடீர் ட்விஸ்ட்-லோக் பவனில் நடந்தது என்ன.?
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது.!? விஜய் - ஆளுநர் சந்திப்பில் திடீர் ட்விஸ்ட்-லோக் பவனில் நடந்தது என்ன.?
TN Govt Formation: விஜய் முதல்வராக முட்டுக்கட்டை.. மெரினாவில் போராட்டமா? - போலீசார் குவிப்பு!
TN Govt Formation: விஜய் முதல்வராக முட்டுக்கட்டை.. மெரினாவில் போராட்டமா? - போலீசார் குவிப்பு!
TVK Vijay: விஜய்க்காக இல்லை..! பாஜகவை தடுக்க? தவெக உடன் செல்ல கூட்டணி கட்சிகளுக்கு ஒகே சொல்லும் ஸ்டாலின்?
விஜய்க்காக இல்லை..! பாஜகவை தடுக்க? தவெக உடன் செல்ல கூட்டணி கட்சிகளுக்கு ஒகே சொல்லும் ஸ்டாலின்?
VIJAY - NTR : ‘ஆட்சியை கலைத்த ஆளுநர் – டெல்லிக்கு சென்ற NTR’ இந்தியாவே அதிர்ந்த தருணம்..!
‘ஆட்சியை கலைத்த ஆளுநர் – டெல்லிக்கு சென்ற NTR’ இந்தியாவே அதிர்ந்த தருணம்..!
Hantavirus: அடுத்த ஆபத்து; சொகுசுக் கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ்; 3 பேர் பலி- எங்கே? எப்படி?
Hantavirus: அடுத்த ஆபத்து; சொகுசுக் கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ்; 3 பேர் பலி- எங்கே? எப்படி?
TVK Vijay: இன்னைக்கு இல்ல, அப்ப விஜய் முதலமைச்சராவது எப்போது? பதவியேற்புக்கான சுபமுகூர்த்த தேதி தெரியுமா?
இன்னைக்கு இல்ல, அப்ப விஜய் முதலமைச்சராவது எப்போது? பதவியேற்புக்கான சுபமுகூர்த்த தேதி தெரியுமா?
Embed widget