Nilgiris Weather: குளிர்ல உறைஞ்சு போயிருவிங்க.! ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? இதை படிங்க .!
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் சில இடங்களில் உறைபனிகூட இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை குறித்த தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, “ பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அடுத்த 7 நாட்களுக்கு வானிலை
07-01-2925 மற்றும் 08-01-2025:
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் வேசான பனிமூட்டம் காணப்படும்.
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.இதனால், சுற்றுலா செல்லும் பயணிகள், அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
09-01-2025:
டைலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
10-01-2025 மற்றும் 11-01-2025:
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12-01-2025:
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13-01-2025:
தமிழகத்தில் ஒருசில இடங்களிதலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (07-01-2025 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (08-01-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.