பால்கனியில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடி...ஃபுல் செக்யூரிட்டியுடன் தயாரான சல்மான் கான் வீடு
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி தனது வீட்டு முன் துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து தற்போது தனது வீட்டை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பு அமைத்திருக்கிறார் சல்மான் கான்
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு
பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கானின் கேலக்ஸி வீடு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ளது. இதில் கீழ் பகுதியில் சல்மான் கானும் மேல் மாடியில் அவரது பெற்றோர்களும் வசித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பைக்கில் வந்த இருவர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு சல்மான் கான் வீட்டிற்கு பலத்த பாதுகப்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் இதுவரை வெளியிடப்படாத நிசான் பாட்ரோல் எஸ்யூவி காரை இறக்குமதி செய்தார் சல்மான் கான் . ஏற்கனவே, கவசம் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடி கொண்ட கஸ்டமைஸ்ட் டொயோட்டா லேண்ட் குரூஸர் காரை வாங்கிய நிலையில், அதன் மேம்பட்ட வடிவமாக தான் தற்போது நிசான் பாட்ரோல் எஸ்யூவியை வாங்கியுள்ளார்
சல்மான் கானுக்கு பல முறை கொலை மிரட்டல் விடுத்த லாரன்ஸ் பிஷ்னாய் இந்த துப்பாக்கிச் சூடில் சம்பந்தப் பட்டிருப்பதாக சல்மான் கான் தரப்பில் சந்தேகிக்கப்பட்டது. தனது வீட்டில் துப்பாக்கி சூடு நடந்த 8 மாதங்களுக்குப் பின் அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் தனது வீட்டை மறுசீரமைத்துள்ளார் சல்மான் கான்.
புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள்
நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி வீட்டின் பால்கனியில் இருந்து அவர் தனது ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இந்த பால்கனிக்கு தற்போது புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகளை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டைச் சுற்றி சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளை கண்கானிக்க அதிநவீன செக்யூரிட்டி மற்றும் துல்லியமாக படம்பிடிக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சல்மான் கான் லாரன்ஸ் பிஷ்னாய் மோதல்
1998 ஆம் ஆண்டு மான் வேட்டையில் ஈடுபட்ட சர்ச்சையில் நடிகர் சல்மான் கான் சிக்கினார். பிளாக்பக் எனப்படும் இந்த மான் இனத்தை வழிபடும் சமூகத்தைச் சேர்ந்தவர் பிரபல கேங்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னாய். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னாய் தரப்பில் இருந்து சல்மான் கானுக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அந்த வகையில் சல்மான் கானிற்கு நெருக்கமானவராக இருந்த பாபா சித்திக் சமீபத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்குப் பின் லாரன்ஸ் பிஷ்னாய் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து சம்லான் கான் வீட்டின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் லாரன்ஸ் பிஷ்னாய் சம்பந்தபட்டிருப்பதாக கூறப்பட்டது.