போதை இல்லா தமிழகத்தை உருவாக்க சூப்பர் ஐடியா ... எப்படி தெரியுமா?
விழுப்புரத்தில் இருந்து விரைவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார் தடகள சங்கத்தின் மாநில செயலாளர் லதா நம்பிக்கை.
விழுப்புரம்: போதையை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அதற்காக மாவட்ட முழுவதும் இளைஞர்களிடம் விளையாட்டினை கொண்டு சேர்ப்போம் என தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் பொண்ணுசாமி பேசினார்.
விழுப்புரத்தில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் எனக் கூறி தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாபெரும் மராத்தான் போட்டியில் 3 ஆயிரம் பங்கேற்பு, வெற்றி பெற்ற வீரர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில செயலாளர் லதா, விழுப்புரம் மாவட்ட தலைவர் பொண்ணுசாமி கார்த்திக் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் சென்னை, விழுப்புரம், கடலூர், நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 16 வயது 18 வயது மற்றும் 20 வயது உட்பட்டோர் மற்றும் 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என 8 பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொர பிரிவிலும் முதல் ஆறு இடங்களை பிடித்த வீரர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் எம்பி.கவுதமாசிகாமணி, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா மற்றும் விழுப்புரம் மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றோர் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். அதன்படி உத்திரபிரதேசத்தில் வரும் 18ம் தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து தடகள சங்கத்தின் மாநில செயலாளர் லதா பேட்டியில் கூறுகையில்... விழுப்புரத்தில் இருந்து விரைவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார் தடகள சங்கத்தின் மாநில செயலாளர் லதா நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் பொண்ணுசாமி கார்திக் பேட்டியில் கூறும் போது போதையை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் அதற்காக மாவட்ட முழுவதும் இளைஞர்களிடம் விளையாட்டினை கொண்டு சேர்ப்போம் என்றார்.