Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
நடிகர் அஜித் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது, அவருடைய கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவை தவிர ஸ்போட்ஸிலும் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித். அதேபோல் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் பைக் ரேஸ் பயிற்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபட்டு வருகிறார். உலகம் முழுவதும் பைக்கில் வலம் வர வேண்டும் என்கிற, தன்னுடைய கனவை நிஜமாக்கி கொள்ள தொடர்ந்து போராடிவரும் அஜித், ஏற்கனவே கார் ரேஸில் கலந்து கொண்ட நிலையில், தற்போது பல வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு மூன்று கார் ரேஸில்
கலந்து கொள்ள பயிற்சி எடுத்து வருகிறார்.
அதன்படி அஜித் ஐரோப்பிய சீரிஸ் 992 g3 கப் பிரிவில் பங்கேற்பார் என தகவல் வெளியான நிலையில், அஜித்தின் அணிக்கான லோகோ ஆகியவை வெளியிடப்பட்டது. அஜித்தின் அணியில் மூன்று கார் ரேஸர்கள் இடம்பெற்றுள்ளனர். அஜித்தின் அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24 ஹெச், போஸே 92 ஜிடி3 ஆகிய கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார் இதற்கான சோதனை ஓட்டம் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே அஜித் கார் ரேஸ் குறித்த பல புகைப்படங்கள் மற்றும் அஜித் கார் ரேசில் பயிற்சி பெறும் வீடியோக்கள் வெளியான நிலையில், துபாயில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் அஜித் பங்கேற்றார். அப்போது தடுப்பு சுவரில் மோதிய அஜித்தின் கார், அப்பளமாக நொறுங்கிய நிலையில் அஜித் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமும் இல்லாமல் உயிர் தப்பி உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Ajith Kumar’s massive crash in practise, but he walks away unscathed.
— Ajithkumar Racing (@Akracingoffl) January 7, 2025
Another day in the office … that’s racing!#ajithkumarracing #ajithkumar pic.twitter.com/dH5rQb18z0