Allu arjun : ”பையனை பாத்துக்குறேன்” சிறுவனின் தந்தையிடம் மனம் நொந்து பேசிய அல்லு அர்ஜூன்.. புஷ்பா 2 நெரிசல் சம்பவம்..
Allu arjun : அல்லு அர்ஜுன், ஸ்ரீ தேஜின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, குழந்தையின் தந்தையைச் சந்தித்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனை ஒரு மாதத்திற்கு அல்லு அர்ஜூன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நெரிசலில் சிக்கிய சிறுவன்:
கடந்த மாதம் ஹைதரபாத்தில் சந்தியா' தியேட்டரில் புஷ்பா-2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி தாய் ஒருவர் பலியான நிலையில் அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜூன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், மேலும் அவரை போலீசார் சிறையில் அடைத்து பின் ஜாமீனில் வெளிவந்தார். மேலும் தாயை இழந்த சிறுவனுக்கு படக்குழுவினர் சார்பில் 2 கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவனை அல்லு அர்ஜூன் சந்திக்காமல் இருந்தது விமர்சனத்தில் சிக்கியது.
இதையும் படிங்க: ஆமீர் கான் தயாரிப்பில் இந்தியில் அறிமுகமாக இருக்கும் சிவகார்த்திகேயன்
சிறுவனை சந்தித்த அல்லு அர்ஜூன்:
இந்த நிலையில் காயமடைந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ தேஜை நடிகர் சந்திக்க அல்லு அர்ஜுன் செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார். அல்லு அர்ஜூனுடன் தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் தில் ராஜுவுடன் சுமார் 30 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார். அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, அல்லு அர்ஜுன், ஸ்ரீ தேஜின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, குழந்தையின் தந்தையைச் சந்தித்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
VIDEO | Hyderabad: Actor Allu Arjun arrives at KIMS Hospital to meet Sritej, who was injured in Sandhya theater stampede incident.
— Press Trust of India (@PTI_News) January 7, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/X0fvUh0qXw
தாமதம் ஏன்?
நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர் நடிகர் ஜனவரி 5 ஆம் தேதி மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் மருத்துவமனையில் பொதுமக்கள் இடையூறு விளைவிக்காத வகையிலும் ஊடகங்கள் கூடுவதைத் தடுக்க ரகசியமாக செல்வதை, ராம்கோபால்பேட்டை காவல் நிலையம் மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியதை அடுத்து வருகை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: Manjal Veeran : ”தரித்திரம் டூ சரித்திரம்” புதிய மஞ்சள் வீரன் யார்? செல் அம் கொடுத்த அப்டேட்
இந்த விஷயத்தில் ஒரு வேளை பொதுமக்கள் கூடி எதிர்மறையான விளைவுகள் நிகழ்வுகள் நிகழ்ந்த அல்லு அர்ஜுன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் தான் அவர் இன்றும் கூட்டத்தை கூடாமல் தவிர்க்க காவல்துறைக்கு முன்பே தகவல் சொல்லிவிட்டு சென்றார்.