Chennai-Nellai Vande Bharat: பொங்கலுக்கு மகிழ்ச்சி செய்தி; சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
Chennai - Nellai Vande Bharat சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் ரயில் இணைக்கப்படுவதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னை -நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்கக்ப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயில்
இந்தியாவில் வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்பாராத அளவில் பயணிகள் அபரிதமான ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதற்குக் காரணம் மற்ற ரயில்களை காட்டிலும் இந்த ரயில்களின் வேகம், நவீன வசதிகளான இணையதள சேவை உதவியுடன் கூடிய மின்னணு தகவல் பலகைகள், வசதியான இருக்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த எளிய நவீன வசதிகள், அவசர உதவிக்கு ரயில் லோகோ பைலட்டுடன் பேச டெலிபோன் வசதி, சிசிடிவி கண்காணிப்பு, தானியங்கி கதவுகள், ஒவ்வொரு இருக்கை அருகிலும் மொபைல் சார்ஜிங் வசதி, எக்ஸிக்யூட்டி வகுப்பில் இருக்கைகளை திருப்பி ஜன்னல் வழியாக நேரடியாக வேடிக்கை பார்க்கும் வசதி, ருசியான சைவ, அசைவ உணவு, காபி, டீ, தண்ணீர் பாட்டில் வழங்கல், ரயிலின் முன் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை செல்லும் வசதி, காற்று அழுத்தத்தில் இயங்கும் சுத்தமான கழிப்பறைகள் ஆகியவை ஆகும். இந்த நவீன வசதிகள் பயணிகளை வந்தே பாரத் ரயிலில் அதிக அளவில் பயணிக்கின்றனர்.
நெல்லை- சென்னை:
திருநெல்வேலி - சென்னைக்கு இடையே, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வந்தே பாரத் ரயிலை குறைந்தபட்சம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 180 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்க முடியும். நெல்லை-சென்னை வந்தேபாரத் ரயிலானது சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த ரயில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெட்டியை தயாரிக்கவும் சராசரியாக 65 கோடி ரூபாய் வரை செலவாகிறது. நெல்லை - சென்னை இடையேயான ரயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரேயொரு எக்சிக்யூட்டிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன.
8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட வந்த நிலையில், தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என இந்திய ரயில்வே மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழக்கமாக நெல்லை - சென்னை இடையேயான 650 கிலோ மீட்டர் தூரத்தை ரயிலில் கடக்க 10 மணி நேரமாகும். ஆனால், புதிய வந்தே பாரத் ரயில் ஆனது, இந்த தூரத்தை வெறும் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து விடுகிறது. இந்த ரயில் பயணத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் வழக்கமான ரயில் டிக்கெட்டிற்கானதை விட அதிகமாகவும், அதேநேரம் பேருந்து டிக்கெட் கட்டணத்திற்கு இணையானதாகவும் உள்ளது என ரயில்வே நிர்வாக தரப்பினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
வசதிகள்:
அதன்படி, பெட்டிகளில் 3 பேர் மற்றும் 2 பேர் அமரும் வகையிலான இருக்கைகளை கொண்டுள்ளன. எக்சிக்யூட்டிவ் வகுப்பில் 2 பேர் அமரும் வகையிலான இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வகுப்பில் 52 இருக்கைகள், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான வசதிகளை கொண்ட சேர்கார் பெட்டியில் 44 இருக்கைகள், சாதாரண பயணிகளுக்கான சேர்கார் பெட்டிகளில் 78 இருக்கைகள் என 8 பெட்டிகளிலும் சேர்த்து, 508 இருக்கைகள் உள்ளன. யூ.எஸ்.பி. போர்ட், உணவு டிரே, இருக்கைக்கு மேலே சென்சார் லைட்டுகள், விமானத்தில் இருப்பது போன்ற மேற்கூரை வடிவமைப்பு, தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான வசதி, செல்போன் சார்ஜர் வசதி, லக்கேஜ் வைப்பதற்கான ரேக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.