![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Stock Market: தொடர்ந்து ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; நிஃப்டி 24,132 புள்ளிகளில் வர்த்தகம்!
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
![Stock Market: தொடர்ந்து ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; நிஃப்டி 24,132 புள்ளிகளில் வர்த்தகம்! Stock Market Sensex above 79600 Nifty crosses 24150 RIL Tata Motors Airtel top gainers Stock Market: தொடர்ந்து ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; நிஃப்டி 24,132 புள்ளிகளில் வர்த்தகம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/28/84bd58e28c802649be28b6682daa8cb21719550118009333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 79,521 புள்ளிகளுடனும் நிஃப்டி 24,127 புள்ளிகளுடனும் வர்த்தகமாகியது.
இந்திய பங்குச்சந்தை நிலவரம்:
காலை 10.0 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 310. 04 அல்லது 0.39% புள்ளிகள் உயர்ந்து 79,554.22 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 88.70 அல்லது 0.37% புள்ளிகள் உயர்ந்து 24,133.29 ஆக வர்த்தகமானது.
இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் 78 ஆயிரத்தை கடந்து வரலாற்று சாதனை படைத்தது. இன்று 79 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் 80 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
Vraj Iron and Steel ஐ.பி.ஓ. இறுதி நாளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ரீடெயில் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.171 கோடி ஐ.பி.ஓ. Bid பெற்றுள்ளது.
ரிலையன்ஸ்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 2% அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஜியோ நிறுவனம் ரீசார்ச் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வதுடன் வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது.
JPMorgan நிறுவனத்தின் சந்தை முதலீடு அதிகரிப்பு, ஐ.டி. துறை ஏற்றம் கண்டுள்ளது உள்ளிட்டவைகளால் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
லாபம் - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ. கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி. எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஹீரோ மோட்டர்கார்ப், ரிலையன்ஸ், டாடா மோட்டர்ஸ்,ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, பவர்கிரிட் கார்ப், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், பிரிட்டானியா, சன் பார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், அதானி எண்டர்பிரைஸ், டைட்டன் கம்பெனி, டி.சி.எஸ்., அப்பல்லோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ,ம் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
இந்தஸ்லேண்ட் வங்கி, க்ரேசியம், விப்ர்ப்ப்ம் ஹெ.சி.எல். டெக், அதானி போர்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல்ம் அல்ட்ட்ராடெக் சிமெண்ட், ஸ்ரீராம் ஃபினான்ஸ், சிப்ளா, மாருதி சுசூகி, ஈச்சர் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)