(Source: ECI/ABP News/ABP Majha)
LIC Share Price: 3வது நாளாக சரிவை சந்திக்கும் எல்.ஐ.சி பங்கின் விலை: முதலீட்டாளர்களுக்கு வல்லுநர்கள் கூறும் அறிவுரை இதுதான்!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி- யின் பங்குகளின் விலை வெளியீட்டு விலையை விட 10 சதவீதம் குறைந்துள்ளது.இது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தையில் விற்பனை :
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. 3.5 சதவீத பங்குகளை ஆரம்ப பங்கு வெளியீடு முறையில் விற்பனை செய்தது. இந்நிலையில் எல்.ஐ.சி-ன் பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் மே 17 ஆம் தேதி எல்.ஐ.சி-யின் பங்குகள் பங்குச் சந்தைக்கு விற்பனை வந்தன.
முதல் நாள் குறைவு:
மே 17 ஆம் தேதி மும்பை பங்குச் சந்தை தொடங்கியதும், பங்கு ஒன்றின் விலை ரூ.867 க்கு தொடங்கியது .இந்த விலையானது, வெளியீட்டு விலையை விட 8.62 சதவீதம் குறைவாகும். அதாவது வெளியீட்டு விலையில் பங்கின் விலை ரூ.949 ஆக இருந்தது.
மூன்றாவது நாளும் குறைவு:
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று எல்.ஐ.சி-ன் பங்கின் விலை ரூ.855.80க்கு தொடங்கியது. இந்த விலையானது மேலும் முன்பை விட மேலும் 2 சதவீதம் குறைந்துள்ளது. இது மொத்தமாக ஆரம்ப வெளியீட்டு விலையை விட 9.8 சதவீதம் குறைவாகும்.
வர்த்தகம்:
வர்த்தக அளவு அடிப்படையில், மொத்தம் 2.33 லட்சம் பங்குகள் பிஎஸ்இ-யில் கைமாறியுள்ளன. அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) 36.54 லட்சம் பங்குகள் இதுவரை வர்த்தகமாயுள்ளன.
வல்லுநர்கள் கருத்து:
இது குறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், எல்.ஐ.சி-ன் பங்குகள் குறைந்து வரும் நிலையில், எல்.ஐ.சி-ல் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களை காத்திருக்குமாறு அறிவுறுத்துகின்றனர். பங்குகளின் விலை சில நாட்களில் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். தற்போதைய மதிப்பு குறைவானது குறைந்த கால முதலீடு செய்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட கால முதலீடு செய்தவர்களுக்கு இது பாதிக்காது எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் சில நாட்கள் கழித்து பங்குகள் உயரும் போது, தற்போது குறைந்த அளவில் பங்குகள் வாங்கியவர்களுக்கு, இந்த விலை குறைவான லாபத்தை கொடுக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read:Tomato price: சத்தமில்லாமல் உச்சத்தில் ஏறிய தக்காளி.. தலைசுற்ற வைக்கும் மார்க்கெட் விலை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்