Bharti Airtel Q4 Earnings: ரூ.2008 கோடி: நஷ்டத்திலிருந்து மீண்டு லாபத்தை தட்டித் தூக்கிய பாரதி ஏர்டெல் நிறுவனம்
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிதியாண்டுக்கான நிகர லாபம் ரூ.2,008 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
![Bharti Airtel Q4 Earnings: ரூ.2008 கோடி: நஷ்டத்திலிருந்து மீண்டு லாபத்தை தட்டித் தூக்கிய பாரதி ஏர்டெல் நிறுவனம் Bharti Airtel Q4 Earnings profit zooms two-fold Rs 2008 crore, revenue rises 22 percent y-o-y Bharti Airtel Q4 Earnings: ரூ.2008 கோடி: நஷ்டத்திலிருந்து மீண்டு லாபத்தை தட்டித் தூக்கிய பாரதி ஏர்டெல் நிறுவனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/17/b465116c0e3a77217ec28d116f91c4b5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நஷ்டத்திலிருந்து மீண்டு லாபத்தை அடைந்த பாரதி ஏர்டெல் நிறுவனம்
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிதியாண்டுக்கான நிகர லாபம் ரூ.2,008 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலாண்டு நிகர லாபம் உயர்வு:
இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில் வருவாய் உயர்ந்துள்ளது. 2021- 2022 ஆம் நிதி ஆண்டில் கடந்த ஆண்டை விட நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ.2,008 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நான்காம் காலாண்டு நிகர லாபமானது ரூ.759 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலாண்டு வருவாய் உயர்வு:
கடந்த நிதி ஆண்டு(2020-21) நான்காம காலாண்டுக்கான வருவாய் ரூ.25,747 கோடியாக இருந்தது. தற்போது (2021- 22) ஆம் நிதி ஆண்டு நான்காம் காலாண்டில் 22.3 சதவீதம் அதிகரித்து ரூ.31,500 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆண்டு லாபம் உயர்வு:
கடந்த நிதி ஆண்டு ((2020-21)பாரதி ஏர்டெல் நிறுவனம் கொரோனா தொற்று காலத்தில் பெரும் நஷ்டத்தை அடைந்தது. அந்த ஆண்டில் ரூ.15,084 கோடி நஷ்டத்தை சந்தித்தது. 2021-22 ஆம் நிதி ஆண்டில் 4,225 கோடி நிகர லாபத்தை அடைந்து முன்னேறியுள்ளது.
ஆண்டு வருவாய் உயர்வு:
ஏர்டெல் நிறுவனத்தின் கடந்த ஆண்டு 2020-21 ஆம் ஆண்டுக்கான வருவாய் ரூ.1,00,616 கோடியாக இருந்தது. ஆனால் 2021-22 ஆம் ஆண்டுக்கான வருவாய் 1,16,547 கோடியாக அதிகரித்துள்ளது .இது முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் அதிகம்.
நிறுவனம் கருத்து:
இது குறித்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தெற்கு ஆசிய சிஇஓ கோபால் விட்டல் கூறியுள்ளதாவது, ஏர்டெல் நிறுவனமானது வணிக ரீதியாக சந்தித்ததற்கு காரணம் சிறந்த நிர்வாக திறமையே காரணம். மேலும் எதிர்காலத்தின் பல்வேறு மாற்றங்களுங்ஹ்களுடனும் அப்டேட்டுகளுடனும் வர உள்ளாதாக தெரிவித்தார்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)