TN Budget 2025: கடலூருக்கு வந்தது விடியல் ! 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சர்
மதுரை, கடலூரில் புதிய காலணி தொழிற்பூங்காக்கள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Budget 2025: மதுரை, கடலூரில் புதிய காலணி தொழிற்பூங்காக்கள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் முலம் 20,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பொது பட்ஜெட்டை, சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, இந்த பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. இது, நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள 2-வது பட்ஜெட் ஆகும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற நேக்கில் இந்த பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இன்றைய பட்ஜெட்தான் இந்த அரசு தாக்கல் செய்யும் 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட் ஆகும். பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசிவரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,
ரூ.250 கோடி மதிப்பில் புதிய காலணி தொழிற்பூங்கா
மதுரை, கடலூரில் புதிய காலணி தொழிற்பூங்காக்கள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் முலம் 20,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் ஓசூரில் 5 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்க ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செமிகண்டக்டர் இயக்கம் தொடங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பில் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பின்தங்கி வந்த நிலையில் முதல்வர் தனி கவனம் செலுத்தி இந்த பட்ஜெட் தொடரில் சுமார் ரூ.250 கோடி மதிப்பில் புதிய காலணி தொழிற்பூங்கா அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பு கடலூர் இளைஞர்கள் இடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பட்ஜெட் அறிவிப்புகள் :
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த போது அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
- புதுமைப்பெண் திட்டத்திற்காக ரூ.420 கோடி
- மகளிர் விடியல் பயணத்திற்காக ரூ. 3600 கோடி
- புதிய தோழி விடுதிகளிகளுக்காக ரூ.77 கோடி
- 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்த ரூ.160 கோடி
- 25 இடங்களில் அன்புசோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும்
- கலைஞர் கனவு இல்லத்திட்டத்தில் 1 லட்சம் வீடுகளுக்கு ரூ.3500 கோடி ரூபாய்
- 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.150 கோடி
- கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு ரூ.13,807 கோடி ரூபாய்
- காலை உணவுத்திட்டத்திற்காக ரூ.600 கோடி
- அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்களுக்காக ரூ.50 கோடி
- நதிக்கரை மேம்பாட்டிற்காக ரூ. 400 கோடி ஆகிய முக்கிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த கல்வியாண்டிற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வித்துறைக்கு ரூ. 8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த நிதி ஆண்டில் ரூ. 8,212 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.282 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

