Tamil Nadu Budget 2024 Highlights: சமூக நீதியை அடிப்படையாக கொண்ட பட்ஜெட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Tamil Nadu Budget 2024 Highlights: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள, ABP இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE

Background
சமூக நீதியை அடிப்படையாக கொண்ட பட்ஜெட் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக நீதியை அடிப்படையாக கொண்ட பட்ஜெட் இது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Budget 2024-2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டையே தாக்கல் செய்து வருகிறார்கள். ரூ. 8 லட்சம் கோடிக்கு அதிகமான கடனை தமிழக அரசு வைத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி
Tamil Nadu Budget 2024-2025 LIVE: பட்ஜெட் அறிவிப்புகளை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பட்ஜெட் அறிவிப்புகளை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அனைத்துத்துறை அமைச்சர்கள், ஆட்சியர்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
: Tamil Nadu Budget 2024: தேசிய பேரிடர் நிதியிலிருந்து இதுவரை எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை - நிதியமைச்சர் குற்றச்சாட்டு
தேசிய பேரிடர் நிதியிலிருந்து இதுவரை எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. கடன் வாங்கும் வரம்புகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது என தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியுள்ளார்.
Tamil Nadu Budget 2024-2025 LIVE: ரூ. 5, 718 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் ரூ.5, 718 கோடி மதிப்பிலான 6, 071 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

