January Auto Sales: ஜனவரி மாத கார் விற்பனையில் முதலிடம் யாருக்கு? லிஸ்ட் இதோ..!
January Auto Sales: ஜனவரி மாத கார் விற்பனை பற்றிய விவரங்களை காணலாம்.

January Auto Sale 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் விற்பனையில், ஜனவரி மாதத்திலும் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மாருதி சசூகி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரித்துள்ளது.
மாருதி சுசூகி:
ஜனவரி மாதத்தில் கார் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் மாருதி சுசூகி. இது 2024, ஜனவரி மாதத்தை விட இந்தாண்டு ஜனவரில் 6% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜனவரி,2025-ல் 2,12,251 கார்களை விற்பனை செய்துள்ளது.
பயணிகள் வாகனங்களில் பிரிவில் 1,73,599 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 2024-ல் 1,66,802 ஆக இருந்தது. ஏற்றுமதி பிரிவில் 27,100 கார்கள் விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஜனவரியில் 23,921 ஆக இருந்தது.
மஹிந்திரா & மஹிந்திரா
ஜனவரி மாதத்தில் மொத்தமாக 85,432 யூனிட்களை விற்பனை செய்துள்ளது 2024, ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 16 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பயணிகள் வாகன பிரிவில் விற்பனை 18 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜனவரியில் 50,659 கார்கள் விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்:
டாடா மோட்டார்ஸ் உள்ளூரில் மட்டும் 78,159 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. இது 2024-ம் ஆண்டு ஜனவரியை விட குறைவு. 7% விற்பனை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஜனவரியில் மொத்தமாக 80,304 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 86,125 யூனிட்கள் விற்பனை செய்திருந்தது.
ஹூண்டாய் மோட்டார்ஸ்
2024 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 3% விற்பனை சரிந்துள்ளது. 63 ஆயிரத்து 603 யூனிட்களை விற்பனை செய்த ஹுண்டாய் நிறுவனம், 2024 ஜனவரி மாதம் 67,615 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. உள்ளூர் விற்பனையில் 54,003 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. இது 2024-ம் ஆண்டு விற்பனையை விட குறைவு. ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவனம் ஏற்றுமதியில் வளர்ச்சி கண்டுள்ளது. 11,600 யூனிட்கள் ஏற்றுமதி செய்துள்ளது. இது 2024, ஜனவரி மாதத்தில் 10,500 யூனிட்கள் ஏற்றுமதி செய்துள்ளது.
டொயோட்டா மோட்டார்
டொயோட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனையில் 19 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 29,371 யூனிட்ஸ் விற்பனை செய்துள்ளது. 2024, ஜனவரியில் 24,609 யூனிட்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் விற்பனையில் 26,178 யூனிட்களும், 3,193 யூனிட்கள் ஏற்றுமதியும் செய்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

