TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
3,274 ஓட்டுநர், நடத்துநர் பணி இடங்களுக்கு இன்று (மார்ச் 21ஆம் தேதி) முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணி இடங்களுக்கு விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை? என்ன தகுதி? விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவற்றை விவரமாக அறிந்துகொள்ளலாம்.
என்னென்ன காலி இடங்கள்?
தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்களில் பணி இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 364, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318 காலிப் பணியிடங்கள் காலியாக உள்ளன. விழுப்புரத்தில் 322, கும்பகோணத்தில் 756, கோயம்புத்தூரில் 384, மதுரையில் 322, திருநெல்வேலியில் 362 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணி இடங்களுக்கு இன்று (மார்ச் 21ஆம் தேதி) முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன தகுதி?
- இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
- 2025ஆம் ஆண்டுப்படி 25 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 40 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. BC/BC முஸ்லிம்/ MBC/ DNC/ SC/ SCA/ ST பிரிவினருக்கு 45 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- உயரம் 170 செ.மீட்டரும், குறைந்தபட்ச எடை 50 கிலோ இருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு முறை
- எழுத்துத் தேர்வு (10ஆம் வகுப்பு தரம்)
- உடற்தகு
தி சரிபார்ப்பு, - சான்றிதழ் சரிபார்ப்பு,
- ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு - ரூ.1,180 (ஜிஎஸ்டி உடன்)
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு- ரூ.590 (ஜிஎஸ்டி உடன்)
கூடுதல் தகவல்களை https://www.arasubus.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள தேர்வர்கள் https://reg.onlinereg.in/ojasreg25/siu_prereg/siu_prereg# என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
https://reg.onlinereg.in/ojasreg25/SIU_Actreg/SIU_Actreg# என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஓடிபி செயலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு விண்ணப்ப எண், பிறந்த தேதி, ஓடிபி, கேப்ட்ச்சா ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு https://onlinereg.in/arasubus/assets/docs/faq_tn.pdf என்ற பக்கத்தில் தீர்வைப் பெறலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து முழுமையாக அறிய, https://onlinereg.in/arasubus/assets/docs/Instructions.pdf என்ற அறிவிக்கையைக் காணலாம்.
விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் +91 04447749002 என்ற எண்ணை, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

