மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, September 22: செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 22, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
பேச்சுவன்மையின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், அதற்கான உதவிகளும் கிடைக்கும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
ரிஷப ராசி
குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கனிவான பேச்சுக்களை கடைபிடிக்கவும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
மிதுன ராசி
எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறத்தவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பகை மறையும் நாள்.
கடக ராசி
குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். மாணவர்கள் கல்வி கற்பதில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வரவு நிறைந்த நாள்.
கன்னி ராசி
சிந்தனையின் போக்கில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிக செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் லாபம் மேம்படும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். மறதி விலகும் நாள்.
துலாம் ராசி
உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
விருச்சிக ராசி
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
தனுசு ராசி
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் ஆதாயமடைவீர்கள். வங்கி பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெளியூரிலிருந்து புதிய வேலைகள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபம் நிறைந்த நாள்.
மகர ராசி
பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதுவிதமான இலக்குகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் இருக்கவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆடம்பர செலவை தவிர்ப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
கும்ப ராசி
வியாபார பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். வீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதளவில் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
மீன ராசி
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிராக செயல்பட்டவர்களின் சூழ்ச்சியை வெற்றி கொள்வீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பாசம் நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion