Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE "BIRTHDAY GIFT"
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சர்ப்ரைஸான இன்ஸ்டா பதிவு ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 29) இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. அந்த வகையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பலருக்கும் அவரது வாழ்த்து பதிவு சர்ப்ரைஸாக இருந்த நிலையில், தனது பிறந்தநாளுக்கு சிறப்பான பரிசை அளித்ததற்கு நன்றி எனவும் தோனி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
தோனி அவரது இன்ஸ்டா பக்கத்தில்,"உலகக் கோப்பை சாம்பியன்கள் 2024. என் இதயத் துடிப்பு அதிகரித்துவிட்டது, அமைதியாக இருந்து, தன்னம்பிக்கையுடன், நீங்கள் இதற்கு முன் செய்ததையே இப்போது செய்து சிறப்பாக முடித்துள்ளீர்கள். உலகக் கோப்பையை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கு, இந்தியாவிலும் உலகின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இந்தியர்கள் சார்பாக நன்றி... வாழ்த்துக்கள். ஹரே... விலைமதிப்பற்ற இந்த பிறந்தநாள் பரிசுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
தோனி எப்போதும் இதுபோன்ற உணர்ச்சிகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துவது குறைவு என்பதால், நள்ளிரவில் தோனி போட்ட இந்த பதிவால் குஷியில் இருக்கும் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட் ஆகும்.